47 ஆண்டுக்கு முன்பே முற்றுகையிடப்பட்ட சவுதியின் மெக்கா மசூதி

47 ஆண்டுக்கு முன்பே முற்றுகையிடப்பட்ட சவுதியின் மெக்கா மசூதி
Updated on
1 min read

ரியாத்: ​முஸ்​லிம்​களின் புனித நகர​மான மெக்​காவை குறி​வைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​கள் நேற்று முன்​தினம் நடத்​திய ட்ரோன் தாக்​குதல் முறியடிக்​கப்​பட்​ட​தாக சவுதி அரேபியா தெரி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில் 47 ஆண்​டு​களுக்கு முன்​, 1979 நவம்​பர் 20-ம் தேதி மெக்​கா​விலுள்ள கிராண்ட் மசூ​தியை 600 பேர் கொண்ட ஆயுதக் குழு​வினர் முற்​றுகை​யிட்ட நிகழ்வு தற்​போது வைரலாகி வரு​கிறது. 1979-ல் காபாவைச் சுற்றி அமைந்​துள்ள கிராண்ட் மசூ​தி​யான மஸ்​ஜித் அல் ஹராமில் விடியற்​காலை தொழுகை முடிந்த நிலை​யில் 600 பேர் கொண்ட ஆயுதம் தாங்​கிய குழு​வினர் மசூ​தியை முற்​றுகை​யிட்​டனர். அவர்​களை முறியடித்து வெளி​யேற்​று​வதற்​காக சவுதி அரேபியப் படை​யினர் வரவழைக்​கப்​பட்​டனர்.

இருந்​த​போதும் 2 வாரங்​களுக்கு இந்த முற்​றுகை நீடித்​தது. மசூதி வளாகங்​களில் ஆயுதக் குழு​வினர் குண்​டு​களை வீசி தாக்​குதலும் நடத்​தினர். சவுதி படைகள் மசூதி வளாகத்​துக்​குள் நுழைந்​து, அதன் பகு​தி​களை படிப்​படி​யாக மீட்​டெடுத்​தன. ஆனால் ஆயுதமேந்​திய கிளர்ச்​சி​யாளர்​கள், மசூ​திக்​குக் கீழே இருந்த பாதாள அறை​கள், நிலத்​தடிப் பாதை ஆகிய​வற்​றின் வழி​யாக பின்​வாங்​கினர். வெளி​நாட்டு உதவி​யுடன் கிளர்ச்​சி​யாளர்​களை சவுதி அரேபியப் படைகள் வெளி​யேற்​றியது நினைவுகூரப்படுகிறது.

47 ஆண்டுக்கு முன்பே முற்றுகையிடப்பட்ட சவுதியின் மெக்கா மசூதி
சவுதி அரேபியா, ஹவுதி இடையே போர் தீவிரமடைகிறது: புனித மெக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in