ஈரான் போருக்கு உதவியாக இராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்

ஈரான் போருக்கு உதவியாக இராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்
Updated on
1 min read

டெல் அவிவ்: ஈ​ரான் போருக்கு உதவும் வகை​யில், இராக்​கின் பாலை​வனப் பகு​தி​யில் இஸ்​ரேல் ராணுவத் தளம் அமைத்​துள்​ளது. இதை இராக் படை​யினர் கண்​டு​பிடித்​த​போது, அவர்​களை விரட்டியடிக்க இஸ்​ரேல் வான் தாக்​குதலை​யும் நடத்​தி​யுள்​ளது.

இராக்​கின் மேற்கு பாலை​வனப் பகுதி மிகப் பெரியது. இங்கு மக்கள் நடமாட்​டம் இருக்​காது. கடந்த 1991-2003-ம் ஆண்​டு​களுக்கு இடையே சதாம் உசேனுக்கு எதி​ராக நடவடிக்​கை மேற்​கொண்​ட​போது, அமெரிக்க ராணுவம் இப்​பகு​தியை ராணுவத் தளமாக பயன்​படுத்​தி​யது.

இப்​பகு​தி​யில் இஸ்​ரேல் ராணுவ​மும் இராக்​குக்கு தெரி​யாமல் ராணுவத் தளத்தை அமைத்​துள்​ளது. பாலை​வனப் பகு​தி​யில் ராணுவ ஹெலி​காப்​டர் மற்​றும் விமானங்​கள் வரு​வதைப் பார்த்த ஆடு மேய்க்​கும் தொழிலாளி ஒரு​வர் அப்​பகு​தி​யில் ராணுவ நடமாட்​டம் குறித்த தகவலை இராக் அதி​காரி​களிடம் கடந்த மார்ச் மாதம் தெரி​வித்​தார். இதையடுத்து அப்​பகு​திக்கு இராக் படை​யினர் சென்​றனர். ஆனால் அவர்​களை அங்கு நெருங்கவிடாமல் இஸ்​ரேல் படைகள் வான் தாக்​குதல் நடத்தி விரட்​டிய​தாக திவால் ஸ்ட்​ரீட் இதழில் செய்தி வெளி​யாகி​யுள்​ளது.

இராக்​கில் இஸ்​ரேல் ராணுவத் தளம் அமைத்​திருந்த தகவல் அமெரிக்கா​வுக்கு மட்​டுமே தெரிந்​திருந்​தது. ஈரான் மீது இஸ்​ரேல் படைகள் வான்​வழித் தாக்​குதலை கடந்த ஏப்​ரல் மாதம் நடத்​தின. அப்​போது ஏதாவது போர் விமானம் ஈரான் பகு​தி​யில் சுட்​டு​வீழ்த்​தப்​பட்​டால், அங்கு மீட்பு பணியை மேற்​கொள்​வதற்​காக மீட்புக் குழு​வினரை தயார் நிலை​யில் வைத்​துள்​ளது. அமெரிக்​கா​வின் எப்​-15 ரக போர் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்​தப்​பட்​ட​போது, ஒரு விமானப்​படை வீரர் ஈரானில் சிக்கிக் கொண்​டார். அவரை மீட்​ப​தற்​கும், அமெரிக்க படைகளுக்கு இராக்​கில் உள்ள முகாமில் இருந்து தேவை​யான உதவி​களை இஸ்​ரேல் அளித்​ததும் தற்​போது தெரிய​வந்​துள்​ளது.

இராக் மண்​ணில் இஸ்​ரேல் ராணுவத் தளம் அமைத்​து, இராக் வீரர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​யது தொடர்​பாக ஐ.நா​.வில் இராக் கடந்த மார்ச் மாதம் இறு​தி​யில் புகார் அளித்​தது. இராக்​கில் உள்ள ராணுவ முகாம்​களை பாது​காக்க அமெரிக்க ராணுவத்​தினர் இராக்​கில் பல தாக்​குதல்​கள் நடத்​தினர். ஆனால் இராக் வீரர்​கள் மீது இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலுக்​கும், தங்​களுக்​கும்​ எந்​த சம்​பந்​த​மும்​ இல்​லை என அமெரிக்​கா தெரி​வித்​தது.

ஈரான் போருக்கு உதவியாக இராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்
மாணவர் தற்கொலை அதிகரிப்பு: 2024-ல் 14,488 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in