ஈரானின் மினாப் நகரில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றன.

ஈரானின் மினாப் நகரில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றன.

அமெரிக்கா, இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு

Published on

தெஹ்ரான்: அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்தனர்.

ஈரானின் ‘ரெட் க்ரெசன்ட் சொசைட்டி’ (Red Crescent Society) திங்கள்கிழமை (மார்ச் 2, 2026) வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்லாமியக் குடியரசான ஈரானை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 555 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அணு நிலையங்கள் மீது தாக்குதல்?

ஈரானின் நடன்ஸ் யூரேனியம் செறிவூட்டும் நிலையத்தின் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. அணு அமைப்பில் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஐஏயுஏ (International Atomic Energy Agency) அமைப்பில் ஈரானின் தூதராக உள்ள ரெசா நஜாபி (Reza Najafi), “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் கொடூரமான தாக்குதல்களை நான் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரானின் அமைதியான மற்றும் பாதுகாப்பான அணு நிலையங்களை அவர்கள் நேற்றும் தாக்கினர். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்கிறது என்ற அவர்களின் கூற்று மிகப்பெரிய பொய்” என்று தெரிவித்தார். எனினும், அந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

ஐஏஇஏ கூறுவது என்ன?

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் காரணமாக ஈரானின் எந்த ஓர் அணு நிலையமும் சேதமடைந்ததாக தகவல் இல்லை என ஐஏஇஏ (IAEA) அமைப்பின் தலைவர் ரஃபேல் குரோஸி தெரிவித்துள்ளார்.

35 நாடுகள் அடங்கிய நிர்வாக சபையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “எந்த அணு நிலையங்களும் சேதமடைந்ததாக அல்லது தாக்கப்பட்டதாக எங்களிடம் எந்தச் சான்றும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஈரானின் அணு ஒழுங்குமுறை அதிகாரிகளை தொடர்புகொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும், இதுவரை எந்த பதிலும் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ள அமெரிக்க ராணுவம், “கடந்த 47 ஆண்டு காலத்தில் ஐஆர்ஜிசி சுமார் 1000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை கொன்றுள்ளது. இந்நிலையில், நேற்று அமெரிக்கா மேற்கொண்ட பெரிய அளவிலான தாக்குதலில் பாம்பின் (ஐஆர்ஜிசி) தலை வெட்டப்பட்டது. இதன் மூலம் இனி ஐஆர்ஜிசி-க்கு தலைமையகம் என்பது இருக்காது. பூமியில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவப் படையை அமெரிக்கா கொண்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் தொடரும்” என்று தெரிவித்துள்ளது.

ஐஆர்ஜிசி (IRGC - Islamic Revolutionary Guard Corps) என்பது ஈரான் ராணுவத்தின் சக்தி வாய்ந்த படைப் பிரிவாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படை ஆகும். கடந்த 1979-ல் இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை காமேனி நிறுவினார். அவரது அறிவுறுத்தலுக்கு இணங்க ஐஆர்ஜிசி செயல்பட்டது நினைவுகூரத்தக்கது.

<div class="paragraphs"><p>ஈரானின் மினாப் நகரில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றன.</p></div>
உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை, தூதரக முயற்சி மூலம் தீர்வு: பிரதமர் மோடி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in