அமெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்தம் - ஈரான் நிராகரிப்பு!

அமெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்தம் - ஈரான் நிராகரிப்பு!
Updated on
1 min read

தெஹ்ரான்: அமெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்துவிட்டதாக அந்நாட்டின் ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 28ல் தொடங்கிய அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பல வாரங்களாக நீடித்து வருகிறது. இந்தப் போரால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியும் முடக்கப்பட்டதால், உலகம் முழுவதும் எரிபொருள் விலைகள் உயர்வதுடன், தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், 48 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ஒரு நட்பு நாட்டின் வாயிலாக, அமெரிக்கா கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து அமெரிக்காவிடமிருந்து எந்தக் கருத்தோ அல்லது உறுதிப்படுத்தலோ வெளியாகவில்லை. இந்த சூழலில், அமெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்துவிட்டதாக, ஈரானின் ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரானின் இந்த நிலைப்பாடு, போர் தொடர்ந்து கடுமையடைந்து வருவதை காட்டுகிறது. போரை நிறுத்துவதற்கான ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்த அதே வேளையில், ராணுவ மோதல்களும் கடுமையாகத் தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலையில், நேற்று இரண்டு அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின் எப் -35 மற்​றும் எப்- 15 இ ரக போர் விமானங்​களை நேற்று சுட்டு வீழ்த்​தி​ய​தாக ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரி​வித்​தன.

ஒரு போர் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட விமானி உயிருடன் இருப்பதாகவும், அவர் அமெரிக்கப் பாதுகாப்பில் வைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்தின. எனினும், இரண்டாவது விமானியின் நிலை என்ன என்பது குறித்த தெளிவு இன்னும் ஏற்படவில்லை.

அமெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்தம் - ஈரான் நிராகரிப்பு!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலால் கட்சிக்குள் குமுறலும் அதிருப்தியும் ஏன்? - ஒரு பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in