​இந்​திய வம்​சாவளி வீரர் நாளை விண்வெளி பயணம்

​இந்​திய வம்​சாவளி வீரர் நாளை விண்வெளி பயணம்
Updated on
1 min read

வாஷிங்​டன்: இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த அமெரிக்​கா​வின் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் நாளை சர்​வ​தேச விண்வெளி நிலை​யத்​துக்கு செல்​கிறார்.

அமெரிக்​கா, ரஷ்​யா, ஐரோப்​பிய ஒன்​றி​யம், ஜப்​பான், கனடா ஆகியவை இணைந்து சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை (ஐஎஸ்​எஸ்) அமைத்து உள்​ளன. தற்​போது அங்கு 7 விண்​வெளி வீரர்​கள் தங்​கி​யிருந்து ஆய்வு செய்​கின்​றனர்.

பொது​வாக 6 மாதங்​களுக்கு ஒரு​முறை அவர்​கள் மாற்​றப்​படு​வது வழக்​கம். இதன்​படி ரஷ்​யா​வின் பைக்​கானூரில் இருந்து 3 வீரர்​கள் ஜூலை 14-ம் தேதி இரவு 7.47 மணிக்கு (இந்​திய நேரப்​படி ஜூலை 14 இரவு 8.17 மணி) சர்​வ​தேச விண்வெளி நிலை​யத்​துக்கு புறப்​படு​கின்​றனர்.

இதன்​படி அமெரிக்​கா​வின் நாசா விண்​வெளி மையத்தை சேர்ந்த அனில் மேனன், ரஷ்ய விண்​வெளி வீரர்​கள் பியோட்​டர் துப்​ரோவ், அன்னா கிகினா ஆகியோர் சோயூஸ் எம்​எஸ் 29 விண்​கலத்​தில் 3 மணி நேரம் பயணம் செய்து சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடைய உள்​ளனர். அவர்​கள் 8 மாதங்​கள் விண்​வெளி​யில் தங்​கி​யிருந்து பல்​வேறு ஆய்​வு​களை மேற்​கொள்ள உள்​ளனர்.

அனில் மேனன் யார்?

கேரளா​வின் பாலக்​காடு பகு​தியை சேர்ந்த சேட்டூர் சங்​கரன் நாயர், இந்​திய சுதந்​திர போராட்ட மூத்த தலை​வர் ஆவார். சென்னை சட்​டக் கல்​லூரி​யில் பயின்ற அவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​யாக பணியாற்றினார். இவருடைய 5 மகள்​களில் ஒரு​வ​ரான மாதவி அம்​மாளின் மகன் சங்​கரன் நாயர். இவர் உயர் படிப்​புக்​காக அமெரிக்​கா​வில் குடியேறி​னார். அவரின் மகன்​தான் அனில் மேனன் (49).

மருத்​து​வம் பயின்ற அவர் முதலில் அமெரிக்க விமானப் படை​யில் பணி​யாற்​றி​னார். கடந்த 2014-ம் ஆண்​டில் நாசா​வில் சேர்ந்​தார். கடந்த 2018-ம் ஆண்​டில் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தில் பணியாற்றினார். கடந்த 2021-ல் நாசா விண்​வெளி வீர​ராக தேர்வு செய்​யப்​பட்டு 2 ஆண்​டு​கள் சிறப்பு பயிற்சி பெற்​றார். தற்​போது முதல்​முறை​யாக அவர் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு செல்​கிறார்.

​இந்​திய வம்​சாவளி வீரர் நாளை விண்வெளி பயணம்
எண்ணெய்க் கப்பலைத் தாக்கி ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் ஈரானின் 140 இடங்கள் மீது தாக்குதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in