அமெரிக்க கல்லூரியில் பட்டம் பெற்ற 202 மாணவரின் கல்விக் கடனை அடைத்த இந்தியர்!

அமெரிக்க கல்லூரியில் பட்டம் பெற்ற 202 மாணவரின் கல்விக் கடனை அடைத்த இந்தியர்!
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்கா​வின் வடக்கு கரோலினா மாகாணம், ராலீ நகரில் வில்​சன் காலேஜ் ஆப் டெக்​ஸ்​டைல்ஸ் செயல்படுகிறது. இந்த கல்​லூரி​யில் ஜவுளி தொடர்​பான பாடங்கள் கற்​பிக்​கப்​படு​கின்​றன.

கடந்த 8-ம் தேதி வில்​சன் காலேஜ் ஆப் டெக்​ஸ்​டைல்ஸ் கல்லூரியின் பட்​டமளிப்பு விழா நடை​பெற்​றது. இதில் 176 பேர் இளநிலை பட்​டங்​களை​யும், 26 பேர் முது​நிலை பட்​டங்​களை​யும் பெற்​றனர். இந்த விழா​வில் இந்​திய வம்​சாவளி தொழில​திபர் அனில் கோச்​சார் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றார். விழா​வில் பேசிய அவர், இளநிலை பட்​டம் பெற்ற 176 பேர் மற்​றும் முது​நிலை பட்​டம் பெற்ற 26 பேர் என மொத்​தம் 202 மாணவ, மாண​வியரின் கல்விக் கடனை அடைப்​ப​தாக உறுதி அளித்​து, அதற்​கான தொகையை வழங்கி​னார்.

ஒட்​டுமொத்​த​மாக மாணவ, மாண​வியரின் ரூ.76.18 கோடி கல்விக் கடனை அவர் அடைத்​தார். இதுதொடர்​பாக பட்​டமளிப்பு விழாவில் அனில் கோச்​சார் பேசி​ய​தாவது: எனது தந்தை பிர​காஷ் கோச்​சார், இந்​தி​யா​வின் பஞ்​சாப் மாகாணத்​தில் இருந்து அமெரிக்கா​வில் குடியேறி​னார். அவருக்​காக வில்​சன் காலேஜ் ஆப் டெக்​ஸ்​டைல்ஸ் கல்​லூரி​யின் கதவு​கள் திறந்​தன.

கடந்த 1950-களில் எனது தந்தை இந்த கல்​லூரி​யில் பட்​டம் பெற்றார். ஜவுளி துறையில் மிகப்​பெரிய தொழில​திப​ராக உயர்ந்தார். இந்த கல்​லூரிக்கு நானும் எனது குடும்​ப​மும் கடன்பட்டிருக்​கிறோம். வில்​சன் காலேஜ் ஆப் டெக்​ஸ்​டைல்ஸ் கல்லூரி​யில் பட்​டம் பெற்ற மாணவ, மாண​வியர் சுதந்​திர பறவைகளாக வாழ வேண்​டும்.

இதற்​காகவே அவர்​களின் கடன் சுமையை எங்​களது குடும்​பம் ஏற்றுக் கொண்​டிருக்​கிறது. எனது தந்தை இப்​போது உயிரோடு இல்​லை. அவரது நினை​வாக மாணவ, மாண​வியரின் கல்விக் கடன்​களை அடைக்​கிறேன். இவ்​வாறு அவர் பேசி​னார். இந்​திய தொழில​திபர் அனில் கோச்​சா​ருக்கு அனைத்து மாணவ, மாணவியரும்,கல்​லூரி நிர்​வாக​த்தினரும் மனதார நன்றி தெரிவித்தனர். நியூ​யார்க் டைம்​ஸ் உட்பட அமெரிக்​கா​வின் முன்னணி ஊடகங்​கள் அனில் கோச்​சாரை பா​ராட்​டி செய்திகளை வெளியிட்​டு உள்​ளன.

அமெரிக்க கல்லூரியில் பட்டம் பெற்ற 202 மாணவரின் கல்விக் கடனை அடைத்த இந்தியர்!
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in