எச்-1பி விசா கட்டண உயர்வு ரத்து: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி - ட்ரம்ப்புக்கு பின்னடைவு

எச்-1பி விசா கட்டண உயர்வு ரத்து: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி - ட்ரம்ப்புக்கு பின்னடைவு
Updated on
1 min read

பாஸ்டன்: அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் எச்-1பி விசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்ற அறிவிப்பை அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது ட்ரம்ப்புக்கு மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது.

அமெரிக்​கா​வில் வெளி​நாட்​டினர் தற்​காலிக​மாக தங்கி வேலை செய்​வதற்​காக எச்​-1பி விசா வழங்​கப்​படு​கிறது. குறிப்​பாக, தொழில்​நுட்ப நிறு​வனங்​கள் (ஐ.டி.) திறமை​யான வெளி​நாட்டு ஊழியர்​களை பணி​யமர்த்த இந்த விசா பயன்​படு​கிறது. குலுக்​கல் முறை​யில் இந்த விசா புதிய விண்ணப்பதாரர்களுக்கு வழங்​கப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறையில் மாற்றம் அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த எச்-1பி விசா கட்டணத்தை சுமார் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது ட்ரம்ப் அரசு. இந்த விசாவை பெறு​பவர்​களில் பெரும்​பாலானவர்​கள் இந்​தி​யர்​கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் எச்-​1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்​யக் கோரி அமெரிக்​கா​வின் 20 மாகாணங்​களின் அரசுகள் சார்​பில் மாசச்சூசெட்ஸ் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டது. அப்போது பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியோ சொரோகின் அளித்த தீர்ப்பில், ‘அமெரிக்க பேரவையின் அனுமதியின்றி அதிபர் ட்ரம்ப், எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தி உள்ளார். அவருக்கு அத்தகைய அதிகாரத்தை பேரவை வழங்கவில்லை. இதை இந்த வழக்கில் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் அரசின் முடிவு சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவிக்கிறது. மேலும், இந்த அறிவிப்பு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்-1பி விசா கட்டண உயர்வால் அதற்கான விண்ணப்பங்கள் தற்போது அமெரிக்காவில் குறைந்துள்ளது. இந்தச் சூழலில் இத்தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாத தகவலின் படி எச்-1பி விசாவுக்கான ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை 85 பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர்.

கடந்த நிதியாண்டில் 3.43 லட்சம் பேர் எச்-1பி விசா கேட்டு விண்ணப்பித்திருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை சுமார் 38 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ட்ரம்ப் அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்-1பி விசா கட்டண உயர்வு ரத்து: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி - ட்ரம்ப்புக்கு பின்னடைவு
வைபவ் சூர்யவன்ஷி திறமையும், ஐபிஎல் கிரிக்கெட் அமைப்பின் நோய்க் குறியும் - கிரெக் சாப்பல் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in