‘ஃபிளை துபாய்’ துணை விமானி யூதர்களுக்கு எதிராகப் பேசியவர்: இஸ்ரேல் தகவல்

‘ஃபிளை துபாய்’ துணை விமானி யூதர்களுக்கு எதிராகப் பேசியவர்: இஸ்ரேல் தகவல்
Updated on: 
1 min read

துபாய்: ‘ஃபிளை துபாய்’ பயணிகள் விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை தாக்கிய ஓமனை சேர்ந்த துணை விமானி, சமூக வலைதளத்தில் யூத மக்களை கொல்லும் வகையில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை இஸ்ரேல் செய்தி நிறுவனத்துக்கு அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி கடந்த புதன்கிழமை (செப்.30) காலை 180 பயணிகளுடன் ‘ஃபிளை துபாய்’ விமானம் புறப்பட்டது. இதில் 174 பயணிகளும், பைலட்டுகள் 2 பேர் உட்பட 6 ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்திய பைலட் ஸ்மித் மச்சார் (39) விமானத்தை இயக்கினார். ஓமன் நாட்டை சேர்ந்த துணை பைலட் உடன் இருந்தார்.

திடீரென பைலட் அறையில் இருந்த கோடரியால் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரைத் துணை பைலட் தாக்கினார். இதில் நிலைகுலைந்த மச்சார், துணை பைலட்டை தீரத்துடன் எதிர்த்துப் போராடினார். சரியான நேரத்தில் பைலட் அறையை திறந்து, சக பயணிகளின் துணையுடன் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கவும், பயணிகளின் உயிர் காக்கவும் உதவினார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் தங்களது பாராட்டினை தெரிவித்தனர்.

பிடிபட்ட ஓமன் துணை விமானியின் சமூக வலைதள கணக்குகளை பார்த்ததில் இருந்து யூத மக்களை கொல்வது குறித்து அவர் பேசியது தெரிய வந்துள்ளது. அவர் ஜிஹாத் போராளி என இதன் மூலம் தெரிகிறது. அதன்படியே அவர் செயல்பட்டுள்ளார். விமான தாக்குதல் முயற்சிக்கான நோக்கம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. அது முடிந்த பிறகே என்னவென்று சொல்ல முடியும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

துணை விமானியை ஐக்கிய அரபு அமீரகத்திடம் சவுதி அரேபியா வியாழக்கிழமை அன்று ஒப்படைத்தது. ஃபிளை துபாய் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமானது என்பதால் இந்த வழக்கின் விசாரணை அங்கு நடைபெறும் என தகவல்.

ஓமன் துணை விமானியின் உடைமைகளை சோதனையிட்ட போது அதில் பாலஸ்தீன விடுதலை சார்ந்த துண்டு பிரசுரங்கள் இருந்ததாக தகவல். ‘துணை விமானி பிடிபட்டதும் தன்னை கொன்று விடுமாறு கூறியுள்ளார்’ என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

‘ஃபிளை துபாய்’ துணை விமானி யூதர்களுக்கு எதிராகப் பேசியவர்: இஸ்ரேல் தகவல்
தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா @ ஆசிய விளையாட்டு போட்டி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in