தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா @ ஆசிய விளையாட்டு போட்டி

ஒரே நாளில் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 தங்கம்
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா

Updated on: 
1 min read

நகோயா: ஜப்பானில் நடைபெறும் நடப்பு ஆசிய விளையாட்டு போட்டி குத்துச்சண்டையில் மகளிருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பர்வீன் ஹூடா தங்கம் வென்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் சீன தைபேவின் சென் நியன்-சென் உடன் பர்வீன் விளையாடினார். இதில் 3-2 என்ற கணக்கில் அவர் வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் மிகவும் நேர்த்தியாக பர்வீன் விளையாடினார். இறுதிப் போட்டியில் முதல் சுற்றை பர்வீனும், இரண்டாவது சுற்றை சென்னும் வென்றனர். தொடர்ந்து மூன்றாவது சுற்றில் பர்வீன் வென்றதன் மூலம் தங்கத்தை தன்வசம் ஆக்கினார்.

இதன் மூலம் மேரி கோம் (2014), லவ்லினா (2026) ஆகியோருக்கு அடுத்ததாக இந்தியாவுக்காக குத்துச்சண்டையில் தங்கம் வென்ற வீராங்கனைகளின் பட்டியலில் மூன்றாவதாக பர்வீன் இணைந்தார்.

26 வயதான பர்வீன், ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 2022 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2022 ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம், 2025 உலக கோப்பை குத்துச்சண்டையில் தங்கம் வென்றுள்ளார். கடந்த 2022-ல் ஆசிய விளையாட்டு போட்டியில் ஊக்க மருந்து பயன்பாடு தொடர்பான தகவல் கிடைக்காததால், தனது வெண்கலப் பதக்கத்தை இழந்த நிலையில், இப்போது பர்வீன் தங்கம் வென்றுள்ளார்.

ஆடவர் பிரிவிலும் தங்கம்

நடப்பு ஆசிய விளையாட்டு போட்டி குத்துச்சண்டை ஆடவருக்கான 80 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அங்குஷ் பங்ஹால் தங்கம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் கிம் மின்-சியோங்கை அவர் வீழ்த்தினார். இன்று (அக்.2) ஒரே நாளில் குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியாவுக்கு மூன்று தங்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மல்யுத்தத்தில் தங்கம்

இந்தியாவின் சுஜித் கல்கல், மல்யுத்தம் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 65 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தஜிகிஸ்தானின் அப்துல்மஜித்தை வீழ்த்தினார்.

நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 75 பதக்கங்களை இதுவரை வென்றுள்ளது. இதில் 15 தங்கம், 25 வெள்ளி மற்றும் 35 வெண்கலம் அடங்கும்.

<div class="paragraphs"><p>இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா</p></div>
‘ஃபிளை துபாய்’ துணை விமானியின் செயலில் ஈரானுக்கு தொடர்பிருந்தால்… - ட்ரம்ப் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in