குவைத்தில் போர் உள்ளிட்ட பல காரணங்களால் உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் கொச்சி வந்தன

குவைத்தில் போர் உள்ளிட்ட பல காரணங்களால் உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் கொச்சி வந்தன
Updated on
1 min read

திருவனந்தபுரம்: குவைத்தில் மேற்​காசிய போர் உள்ளிட்ட பல்​வேறு காரணங்​களால் உயி​ரிழந்த 20 இந்தியர்​களின் உடல்​கள் நேற்று அதி​காலை​யில் கேரளாவில் உள்ள கொச்சி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்​தன.

மேற்​காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்ரேலும் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி போர் தொடுத்​தன. இதற்கு பதிலடி​யாக ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகு​டா​ நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் உள்ள நாடு​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி வருகிறது.

இந்​நிலை​யில் குவைத்​தில் உள்ள ஒரு குடிநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் மீது ஈரான் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை நடத்​திய தாக்​குதலில் தமிழ்​நாட்​டின் ராம​நாத​புரம் மாவட்​டம், முதுகுளத்​தூரை சேர்ந்த சந்​தானசெல்​வம் கிருஷ்ணன் (37) என்​பவர் உயி​ரிழந்​தார். இவரை தவிர மேலும் 19 இந்தியர்கள் வெவ்​வேறு சம்​பவங்​கள் மற்​றும் இயற்கை காரணங்​களால் உயி​ரிழந்​தனர்.

என்​றாலும் போர் காரண​மாக அவர்​களின் உடல்​களை தாயகம் கொண்​டு​வரும் பணி தாமத​மானது. இந்​நிலை​யில் குவைத்​தில் இறந்த 20 இந்​தி​யர்​களின் உடல்​களும் சிறப்பு விமானம் மூலம் நேற்று அதி​காலை​யில் கேரளாவில் கொச்சி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்​தன. இதையடுத்து அவர​வர் சொந்த ஊர்​களுக்கு உடல்​கள் அனுப்பி வைக்​கப்​பட்​டன.

வெளி​யுறவு அமைச்​சகத்​தின் மூத்த அதி​காரி ஒரு​வர் நேற்று முன்​தினம் கூறுகை​யில், “கு​வைத்​தில் இறந்த இந்தியர்​களின் உடல்​களை விரை​வாக தாயகம் கொண்டு வரு​வதை உறு​தி​செய்​திட குவைத்​தில் உள்ள இந்​தி​யத் தூதரகம் உள்​ளூர் அதி​காரி​களு​டன் இணைந்து பணியாற்றி வரு​கிறது” என்​றார். குவைத்​தில் ட்ரோன் தாக்குதலில் முதுகுளத்​தூரை சேர்ந்த சந்​தானசெல்​வம் உயி​ரிழப்​புக்கு அங்​குள்ள இந்​திய தூதரகம்​ ஆழ்ந்​த இரங்கல்​ தெரி​வித்​தது.

குவைத்தில் போர் உள்ளிட்ட பல காரணங்களால் உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் கொச்சி வந்தன
அசாமில் காங்கிரஸுக்கு ஹாட்ரிக் தோல்வி உறுதி: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in