ஈரானில் பெய்யும் கருப்பு மழையால் சுவாச பிரச்சினைகள் அதிகரிக்கும்: உலக சுகாதார மையம்

கருந்துகள்கள் நிறைந்த காற்று மற்றும் கருப்பு மழையால் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் தெஹ்ரான்

கருந்துகள்கள் நிறைந்த காற்று மற்றும் கருப்பு மழையால் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் தெஹ்ரான்

Morteza Nikoubazl
Updated on
1 min read

ஜெனிவா: ஈரானில் கருப்பு மழை பெய்த நிலையில், “கருப்பு மழையும் அதனுடன் கலந்து வரும் அமிலமும் மக்களுக்கு ஆபத்தானது. குறிப்பாக சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது” என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

கடந்த திங்கள் கிழமை, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் எண்ணெய் சேகரிப்பு மையமுமு் தாக்கப்பட்டதை அடுத்து, அவை தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனால், தலைநகரை கருப்புப் புகை மூடியது. இதையடுத்து பெய்த மழை, கருப்பு நிறுத்தில் இருந்துள்ளது.

காற்றில் கருந்துகள்கள் கலந்துள்ளதாலும் கருப்பு மழையுடன் அமிலம் கலந்து இருப்பதாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று ஈரான் அரசு, அறிவுறுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தெஹ்ரானில் உள்ள தனது அலுவலகத்துடன் இணைந்து உலக சுகாதார மையம் ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர், ‘‘கருப்பு மழையும் அதனுடன் வரும் அமில மழையும் மக்களுக்கு ஆபத்தானது. குறிப்பாக சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஈரான் மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளதற்கு உலக சுகாதார மையம் ஆதரவு அளிக்கிறது.

தாக்குதல்களால் எண்ணெய் சேமிப்பு நிலையங்களிலும் சுத்திகரிப்பு நிலையங்களிலும் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதால், காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விஷத்தன்மை நிறைந்த ஹைட்ரோகார்பன்கள், சல்பர் ஆக்சைடுகள் மற்றும் நைட்ரஜன் சேர்மங்கள் அதிக அளவில் காற்றில் வெளியேறியுள்ளன’’ என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அறிவியலாளர்கள் கூறும்போது, ‘‘இந்த புகை அல்லது தூசித் துகள்களை மூச்சில் இழுப்பதாலும், அவை தோலில் படுவதாலும் தலைவலி, கண் எரிச்சல், தோல் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். நீண்ட காலம் இவ்வாறான சுகாதாரமற்ற காற்றை சுவாசித்தால், சில வகை புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது’’ என தெரிவித்துள்ளனர்.

கருப்பு மழை எப்படி உருவானது?: வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்யும்போது காற்றில் இருந்த எண்ணெய் மற்றும் புகை துகள்களுடன் அது கலந்து “கருப்பு மழை” உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரீடிங் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் அக்ஷய் தியோராஸ் கூறுகையில், “இந்த மழை மக்களுக்கு ஒரு எச்சரிக்கையைப் போன்றது. விஷமயமான காற்றில் நீண்ட காலமாக இருப்பதே பெரிய சுகாதார ஆபத்து. மக்கள் வீட்டுக்குள் இருப்பது, வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது, தோலை மூடுவது போன்ற முன்னெச்சரிக்கைகளை எடுத்தால் ஆபத்தை குறைக்கலாம். புதிய தாக்குதல்கள் இல்லாவிட்டால் காலப்போக்கில் காற்றின் தரம் மேம்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>கருந்துகள்கள் நிறைந்த காற்று மற்றும் கருப்பு மழையால் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் தெஹ்ரான்</p></div>
எல்பிஜி சிலிண்டர் நெருக்கடி | நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in