

டாக்கா: வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியை இழந்தார் ஷேக் ஹசீனா. இந்நிலையில் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் நிறுவன தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாட்டில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே அடுத்த சில நாட்களுக்கு தீவிர கண்காணிப்பு மற்றும் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்குமாறு சட்டஅமலாக்க அமைப்புகளுக்கு வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.