Published : 08 Apr 2014 01:11 PM
Last Updated : 08 Apr 2014 01:11 PM

நந்திதா தாஸ் உட்பட 2 இந்தியர்களுக்கு யேல் ஃபெல்லோ விருது

2014 ஆம் ஆண்டுக்கான யேல் ஃபெல்லோ விருதினை பிரபல நடிகை நந்திதா தாஸ் மற்றும் காத்ரெஜ் இந்திய கலாச்சார மையத்தின் தலைவர் பர்மேஷ் ஷஹானி ஆகிய 2 இந்தியர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் நடுநிலை சிந்தனையாளர்களைத் தேர்வு செய்து 'யேல் ஃபெல்லோ' விருதுகள் வழங்கப்படுகிறது.

பிறக்கும் குழந்தை இறப்பு விகிதம், பாலின ரீதியான வேறுபாடு, இனவாத பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை என்று பல பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டதற்காக நந்திதா தாஸுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இம்முறை இத்தாலியின் ரோபோடிக் ஆய்வாளர், பாகிஸ்தான் வழக்கறிஞர், சிரியாவுக்கான அமைதி தூதர் என உலக அளவில் 15 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

யேல் பல்கலைக்கழகம் வழங்கும் இந்த விருது நடுநிலை சிந்தனையாளர்கள்,தெளிவான நற்சிந்தனை போக்குடன் செயல்படும் நபர்களுக்கு வருடம் தோறும் வழங்கப்படுகிறது.

2002 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் யேல் விருது பட்டியலில் இதுவரை இந்தியர்களே அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x