Last Updated : 08 Sep, 2017 11:13 AM

 

Published : 08 Sep 2017 11:13 AM
Last Updated : 08 Sep 2017 11:13 AM

கத்தார் - அரேபிய நாடுகளின் பிரச்சினை தீர்க்க அமெரிக்கா தயார்: ட்ரம்ப்

கத்தாருக்கும், அரேபிய நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்சினையை தீர்க்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை குவைத் தலைவர் அல் அகமத் அல் சபாவுடன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் பேசும்போது, "கத்தார் மற்றும் அரேபிய நாடுகளுக்கிடையே நிலவும் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா உதவ தயாராக இருக்கிறது. சமாதானம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கிறேன். இதில் எங்களது முழு ஒத்துழைப்பை தருவோம்" என்றார்.

கத்தாரில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படைத் தளம் உள்ளது. எனவே சவுதி அரேபியாவுக்கும் கத்தாருக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த அமெரிக்கா தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நிலவும் பிரச்சினையை தீர்க்கவும் அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக தீவிரவாதத்துக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் அண்மையில் துண்டித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x