Published : 23 Feb 2023 08:49 AM
Last Updated : 23 Feb 2023 08:49 AM

ஐ.நா. பொதுச் சபையில் இன்று கொண்டு வரப்படும் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் - இந்தியாவுக்கு உக்ரைன் அரசு கோரிக்கை

புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டு நாளையுடன் ஒராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் அமைதியை உறுதி செய்து உக்ரைனின் சுதந்திரத்தை காக்க தீர்மானம் ஒன்று ஐ.நா பொதுச் சபையில் இன்று கொண்டு வரப்படுகிறது.

இதுவரை உக்ரைன் விவகாரம் தொடர்பாக, ரஷ்யாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா.வின் வாக்கெடுப்புகளில் பங்கு கொள்ளாமல் இந்தியா விலகியிருந்தது. இந்நிலையில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என இந்தியாவிடம் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அலுவலகத்தின் தலைவர் ஆன்ட்ரி யெர்மாக் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: ஐ.நா பொதுச் சபையில் இன்று நடைபெறும் ஓட்டெடுப்பில் உக்ரைனுக்கு தென் பகுதியில் உள்ள நாடுகளின் ஆதரவு தேவை. இந்தியாவின் ஒத்துழைப்
பும் எங்களுக்கு மிக முக்கியம். எங்கள் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என நம்புகிறோம். இதில் எங்களது இலக்குகள் தெளிவாக உள்ளன. ரஷ்யாவின் நிலப்பகுதியை நாங்கள் ஒரு செ.மீ கூட உரிமை கொண்டாடவில்லை.

எங்கள் நிலப் பகுதியை நாங்கள் திரும்ப பெற விரும்புகிறோம். நாங்கள் போராடும் அதே நேரத்தில், 10 அம்ச அமைதி திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். போரை முடிவுக்கு கொண்டு வர நியாயமான கேள்விகள் அதில் உள்ளன. இந்த வரைவு தீர்மானத்தில் போரை முடிவுக்கு கொண்டு வரும் எந்த வாய்ப்பையும் உக்ரைன் வரவேற்கிறது. உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்ய படைகள் முழுவதும் வெளியேற வேண்டும். அதிபர் ஜெலன்ஸ்கிஇவ்வாறு யெர்மாக் கூறினார்.

ஆனால் இந்த போன் உரையாடல் குறித்து மத்திய அரசு எதுவும் கூறவில்லை. ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி பல முறை பேசியுள்ளார். அதிபர் புதினை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி சந்தித்தபோது, ‘இன்றைய யுகம் போருக்கானது அல்ல’ என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x