Published : 17 Dec 2022 10:26 AM
Last Updated : 17 Dec 2022 10:26 AM

ஒரே நாளில் 70 ஏவுகணைகளை பொழிந்த ரஷ்யா | நிலைகுலைந்த உக்ரைன்; பிடிவாதம் காட்டும் ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து இது மிகப் பெரிய தாக்குதல் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கீவ் நகர் இருளில் மூழ்கியது. மத்திய கிர்வி ரீ பகுதியில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கேர்சானிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 12 பேர் இறந்திருக்கலாம் என்று கணிப்பதாக உக்ரைன் கூறியுள்ளது.

பிடிவாதம் காட்டும் ஜெலன்ஸ்கி: இந்நிலையில், நேற்று மாலை தொலைக்காட்சி வாயிலாக உரையாடிய உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, "இன்றைய தாக்குதல் போல் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த ரஷ்யாவிடன் சக்திவாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. இந்நிலையில் நான் மேற்கத்திய நாடுகள் எங்களுக்கு ஆயுதங்களை வழங்கி உதவ வேண்டும் என்று கோருகிறேன். உக்ரைனும் பதில் தாக்குதலுக்கு வலுவான நிலையில் உள்ளது. அதனால் மாஸ்கோவில் உள்ள ராக்கெட் வழிபாட்டாளர்கள் எண்ணம் நிறைவேறாது. அவர்களால் இந்தப் போரில் ஆதிக்கம் செலுத்த முடியாது" என்று கூறினார்.

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்தினாலே ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அண்மைக்காலமாக உக்ரைனுக்கான ஆயுத வழங்கலில் நேட்டோ நாடுகள் கொஞ்சம் கடினம் காட்டுகின்றன. இப்போதைக்கு அமெரிக்கா பெரிய பக்கபலமாக இருக்கும் நிலையில் அதுவும் என்று கைவிரிக்கும் என்று தெரியாத சூழலே நிலவுகிறது.

புதினுடன் பிரதமர் மோடி பேச்சு: ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார். அதில் உக்ரைன் போர் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். உக்ரைனில் நடந்து வரும் மோதலை பேச்சுவார்த்தை, தூதரக ரீதியிலான நடவடிக்கைகளால் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று புதினிடம், பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாமர் கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் இரு தலைவர்களும் நேரில் சந்தித்து இருந்தனர். அப்போதும் இந்த நூற்றாண்டு போருக்கான காலம் இல்லை என்று பிரதமர் மோடி புதினிடம் நேரடியாகவே கூறியிருந்தார்.

படைத் தளபதி எச்சரிக்கை: முன்னதாக சர்வதேச ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த உக்ரைன் படைத் தளபதி ஜெனரல் வேலரி, "மீண்டும் கீவ் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அதற்காக படைகளை ஒருங்கிணைத்து வருகிறது. பிப்ரவரி அல்லது மார்ச்சில் மிகக் கொடூரமான தாக்குதல்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். கடந்த அக்டோபர் மாதம் முதல் ரஷ்யப் படைகள் எங்களுக்கான மின் சக்திகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் எங்களின் எரிசக்தி துறை பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் எதிரியை வீழ்த்த முடியும். ஆனால் எங்களுக்கு 300 டாங்கர்கள், 600 முதல் 700 இன்ஃப்ன்ட்ரி ஃபைட்டிங் வெஹிக்கிள்ஸ், 500 ஹவிட்சர்ஸ் தேவைப்படும்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x