Published : 10 Oct 2016 02:35 PM
Last Updated : 10 Oct 2016 02:35 PM

உலகம் அபாயகரமான நிலையில் உள்ளது: அமெரிக்க-ரஷ்ய பதற்ற உறவுகள் குறித்து கோர்பசேவ் கருத்து

சிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும்-ரஷ்யாவுக்கும் ஏற்பட்டு வரும் பதற்றமான உறவுகளால் உலகம் அபாயகரமான நிலையில் இருப்பதாக முன்னள் சோவியத் தலைவர் மிகைல் கோர்பசேவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் விவகாரத்தினால் அமெரிக்க-ரஷ்ய உறவுகள் ஏற்கெனவே பனிப்போர் காலக்கட்டத்திற்குப் பிறகு மோசமடைந்துள்ளது. சிரியா விவகாரத்தில் அமெரிக்க முயற்சிகளுக்கு ரஷ்யா பின்னடைவை ஏற்படுத்துவதால் பதற்றம் அதிகரித்துள்ளதாக கோர்பசேவ் கூறுகிறார்.

ஆர்.ஐ.ஏ நொவோஸ்டி என்ற செய்தி நிறுவனத்திற்கு கோர்பசேவ் கூறும்போது, “உலகம் அபாயகரமான புள்ளியை எட்டியுள்ளது. நான் இதற்காக தூலமான எந்த ஒரு பரிந்துரைகளையும் அளிக்க விரும்பவில்லை, ஆனால் இது நிறுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது என்பதை கூற விரும்புகிறேன்.

உரையாடலைத் தொடக்க வேண்டும், பேச்சு வார்த்தைகளை நிறுத்துவது பெரிய தவறு.

முக்கிய முன்னுரிமைகளுக்கு நாம் திரும்புவது அவசியமாகிறது. அணு ஆயுத ஒழிப்பு இதில் முக்கியத்துவம் பெறுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை, சுற்றுச்சூழல் பேரழிவு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்.

துதான் உலகம் எதிர்கொள்ளும் அபாகரமான விவகாரங்கள், இவைதான் சவால்கள், இதனை ஒப்பிடும்போது மற்றவையெல்லாம் பின்னணிக்குச் செல்ல வேண்டியவையே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x