Last Updated : 18 Oct, 2016 02:03 PM

 

Published : 18 Oct 2016 02:03 PM
Last Updated : 18 Oct 2016 02:03 PM

பாரபட்சம் பின்பற்றும் யுஎஸ் ஊடகங்கள்: டிரம்ப் கட்சி தாக்கு

அதிபர் தேர்தலில் அமெரிக்க ஊடகங்கள் ஒருதலைபட்சமாக நடத்து கொள்வதாக, குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

புளோரிடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் தனது ஆதரவாளர்களிடம் பேசும்போது, "அமெரிக்க ஊடகங்கள் தங்களது ஒரு தலைபட்சமான பார்வையால் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை இருட்டடிப்பு செய்து வருகின்றன.

ஜனநாயக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரியின் ஊழல்கள் அனைத்தையும் தேசிய ஊடகங்கள் மறைத்துவிட்டன. அதற்கு மாறாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது தொடரும் போலி புகார்களின் மீது தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ஹிலாரி கிளிண்டனும் அவர்களது வெளியுறவுக் கொள்கை செயல்பாடுகளால் உலகத்தை பாதுகாப்பற்றதாக மாற்றிவிட்டனர். ஒபாமா, ஹிலாரியின் தலைமைப் பண்பு அமெரிக்காவை பலவீனமாக மாற்றியுள்ளது.

மேலும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டால் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு உதவ மாட்டோம். அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x