Last Updated : 20 Oct, 2016 05:37 PM

 

Published : 20 Oct 2016 05:37 PM
Last Updated : 20 Oct 2016 05:37 PM

காஷ்மீர் குறித்த பாகிஸ்தான் நிலைப்பாட்டிற்கு இஸ்லாமிய நாடுகள் அமைப்பு ஆதரவு

காஷ்மீர் குறித்த தங்களது நிலைப்பாட்டிற்கு இஸ்லாமிய நாடுகள் அமைப்பு (Organisation of Islamic Countries) ஆதரவு தெரிவித்த்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 18-19 தேதிகளில் தாஷ்கண்டில் இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து மிகவும் வலுவான தீர்மானம் நிறைவேற்றியதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் கோரியுள்ளது.

அதாவது காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், அங்கு மனித உரிமை மீறல்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் இஸ்லாமிய நாடுகள் அமைப்பு ‘வலுவான’ தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அதாவது ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் படி காஷ்மீரிகளின் சுய நிர்ணய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அங்கு பாதுகாப்பற்ற காஷ்மீரிகள் மீது ராணுவம் மற்றும் போலீஸார் நடத்தும் தாக்குதல்கள் குறித்து கடுமையான கண்டனங்களும் தெரிவிக்கப்பட வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதே போல் காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை தீவிரவாதத்துடன் இந்தியா ஒப்பிடுவதையும், சித்திரப்படுத்துவதையும் ஏற்க முடியாது என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

தெற்காசியக் கனவான அமைதி மற்றும் சமாதானத்திற்கு காஷ்மீர் விவகாரமே இந்தியா-பாகிஸ்தான் இடையே மையபிரச்சினையாக இருந்து வருவதாக இந்த அமைப்ப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் கலவரங்களுக்கு எதிரான அரச அடக்குமுறை என்று கூறிய அமைப்பு, அதனைக் கண்டிக்காது உலக நாடுகள் மவுனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் காஷ்மீரி அரசியல் தலைவர்களை நீண்டகாலம் கைது செய்து வைத்திருப்பது பேச்சு மற்றும் இயங்குவதற்கான சுதந்திரத்தை மறுப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.

காஷ்மீர் நிலவரங்களின் உண்மை நிலையை கண்டறிய இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் உண்மை அறியும் குழுவை அங்கு இந்தியா அனுமதிக்காதது வருந்தத்தக்கது என்று ஓ.ஐ.சி. தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x