Last Updated : 23 May, 2016 10:48 AM

 

Published : 23 May 2016 10:48 AM
Last Updated : 23 May 2016 10:48 AM

ஈரானில் பிரதமர் மோடி: அதிபர் ரவுகானியுடன் இன்று சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று ஈரான் தலைநகர் தெஹ்ரான் சென்றார். இந்தப் பயணத்தின்போது இரு நாட்டு வர்த்தகம், எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 1979 இஸ்லாமிய புரட்சிக் குப் பிறகு 2001-ல் அப்போ தைய பிரதமர் வாஜ்பாய் ஈரான் சென்றார். அப்போதுமுதல் தெ ஹ்ரான்-டெல்லி இடையே சுமுக உறவு நீடிக்கிறது.

கடந்த 2012-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அணிசேரா நாடுகளின் மா நாட்டில் பங்கேற்க தெஹ்ரான் சென்றார். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி முத ல்முறையாக ஈரான் சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலையில் ரஷ்யாவின் உபா நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அதன்பிறகு இருநாடுகளின் பல் வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் 12-க்கும் மேற்பட்ட முறை டெல்லி, தெஹ்ரானில் சந்தித்துப் பேசியு ள்ளனர்.

அதன்தொடர்ச்சியாக பிரத மர் மோடி நேற்று தெஹ்ரான் சென்றார். இதுகுறித்து அவர் கூறியபோது, எனது பயணத்தி ன்போது இருநாட்டு வர்த்தகம், எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்த ப்படும் என்று தெரிவித்தார்.

அதிபர் ஹசன் ரவுகானி, மூத்த தலைவர் அயத்துல்லா கொமேனி உள்ளிட்ட தலைவர்களை மோடி இன்று சந்தித்துப் பேசுகிறார். அப்போது ஈரானின் சாப்ஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று எதி ர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் குவாதர் நகரில் சீன அரசு மிகப்பெரிய துறைமுக த்தை அமைத்து வருகிறது. எனவே அதற்குப் போட்டியாக குவாதரில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள சாப்ஹார் துறைமுக மே ம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்க இந்தியா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தால் கடல் மார்க்கமாக ஆப்கானி ஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தை இந்தியா அதிகரிக்க முடியும்.

எரிசக்தி துறை ஒத்துழைப்புஅணுஆயுத விவகாரம் கார ணமாக ஈரான் மீது ஐ.நா. சபை பல்வேறு பொருளாதார தடைகளை விதித்திருந்தது. கடந்த ஆண்டு ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுஆயுத தடுப்பு ஒப்பந்தம் கையெழு த்தானது. இதைத்தொடர்ந்து ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டன.

எனவே பிரதமர் மோடியின் பய ணத்தின்போது இந்தியா, ஈரான் இடையே எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்க ப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x