Published : 21 May 2016 10:27 AM
Last Updated : 21 May 2016 10:27 AM

காணாமல்போன எகிப்து விமானம் கண்டுபிடிப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு 56 பயணிகள், விமானிகள் உட்பட 10 ஊழியர்களுடன் நேற்றுமுன்தினம் அதிகாலை ‘எகிப்து ஏர்’ பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் மத்தியதரைக்கடல் பகுதியில் 37,000 அடி உயரத்தில் பறந்தபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. எகிப்து கடற்படை, விமானப் படையினர் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து வடக்கே 290 கி.மீ. தொலைவில் மத்திய தரைக்கடலில் விமானத்தின் சில பாகங்களும் பயணி களின் உடமைகளும் காணப்பட்டதாக எகிப்து அரசு நேற்று தெரிவித்தது.

“விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை, இது தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கலாம்” என்று எகிப்து கூறுகிறது. ஆனால் இதுவரை எந்தவொரு அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.விமானத் தில் பயணம் செய்த 66 பேரும் உயிரிழந் திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ பகுதியில் பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு வருவதாக எகிப்து கடற்படை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x