Published : 05 Apr 2016 10:29 AM
Last Updated : 05 Apr 2016 10:29 AM

கிரீஸ் தீவுகளில் இருந்து துருக்கிக்கு விரட்டப்படும் அகதிகள்

கிரீஸ் நாட்டின் தீவுகளில் தஞ்ச மடைந்துள்ள அகதிகள் நேற்று முதல் துருக்கிக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

உள்நாட்டுப் போரால் பாதிக் கப்பட்டுள்ள சிரியா, இராக், ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சம் கோரி வருகின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் கிரீஸ் நாட்டின் லாவோஸ் உள்ளிட்ட தீவுகளில் அவர்கள் கரையேறி வருகின்றனர்.

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் அவர்களுக்கு அடைக்கலம் அளித்து வந்தன. ஐரோப்பிய ஒன்றி யத்தில் அங்கம் வகிக்கும் இதர நாடுகள் அகதிகளுக்கு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அண்மையில் பாரீஸ் மற்றும் பிரஸல்ஸில் நடத்தப் பட்ட தற்கொலைப்படை தாக்குதல் களால் அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான நடவடிக்கைகளை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் துருக்கிக்கும் இடையே அண்மையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி கிரீஸ் தீவுகளில் தங்கி யுள்ள அகதிகளை துருக்கி திரும்பப் பெற்றுக் கொள்ளும். அதற்கு பிரதி பலனாக துருக்கிக்கு பெரும் தொகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத் தில் துருக்கியை உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளில் துருக்கி குடிமக்கள் விசா இன்றி பயணம் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் தஞ்சமடையும் சட்டப்பூர்வமான சிரியா அகதி களை மட்டும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி கிரீஸின் லாவோஸ் தீவில் இருந்து 2 படகு களில் 131 அகதிகள் வலுக்கட்டாய மாக துருக்கியின் திகிலி துறை முகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட னர். இதேபோல் கீரிஸ் தீவுகளில் தங்கியிருக்கும் அனைத்து அகதிகளும் விரைவில் துருக்கிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

துருக்கியில் சிரியா அகதிகள் மட்டும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். பாகிஸ் தான், ஆப்கானிஸ்தான், இராக் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர் களை அவரவர் சொந்த நாடு களுக்கு திருப்பி அனுப்பப்படு வார்கள் என்று துருக்கி அரசு அறிவித்துள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x