Published : 27 Feb 2022 02:04 PM
Last Updated : 27 Feb 2022 02:04 PM

பேச்சுவார்த்தைக்கு தயார்! ஆனால், 'உடந்தை' நாடான பெலராஸில் நடத்த உடன்பாடில்லை: உக்ரைன் அதிபர்

கீவ்: உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்யா மீண்டும் அறிவித்துள்ள நிலையில் உக்ரைன் அதிபார் வொலடிமிர் ஜெலன்ஸ்கி நிபந்தனையை முன்வைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். அதன் பின்னர் உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவம் வேகமாக முன்னேறி வருகிறது. உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது போல் இன்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உடந்தை நாட்டில் முடியாது: பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகக் கூறியுள்ள அதிபர் ஜெலன்ஸ்கி, ஆனால் ரஷ்யா சொல்வது போல் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். பெலாரஸின் ஹோமெல் நகரில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளலாம் என்று ரஷ்யா கூறியுள்ளது. ஆனால், உக்ரைன் தொடர்ந்து போலந்தில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளலாம் எனக் கூறுகிறது. பெலாரஸை ரஷ்யாவின் உடந்தை நாடு என்று உக்ரைன் அழைக்கிறது. போலந்தின் வார்ஸா, துருக்கியின் இஸ்தான்புல், ஹங்கேரியின் புடாபெஸ்ட், அல்லது பாக்கூ, பிராடிஸ்லாவா என சில நகரங்களின் பட்டியலைக் கொடுத்து இங்கு ஏதாவது ஓரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

ஆனால், பெலாரஸின் ஹோமல் நகரில் ரஷ்யாவின் குழு தயார் நிலையில் உள்ளது. அந்தக் குழுவில் ராணுவ அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் இடம்பெற்றுள்ளதாக க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்தே, ஜெலன்ஸ்கி அவ்வப்போது வீடியோக்கள் மூலம் தொடர்பில் இருந்து வருகிறார். தாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளதாக அவர் இரண்டாவது நாளில் வெளியிட்ட வீடியோ உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் தானும், தனது குடும்பத்தினரும் தான் ரஷ்யாவின் இலக்கு என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டார். அடுத்தடுத்த வீடியோக்களில் தொடர்ந்து உக்ரைனில் தான் இருப்பதாகக் கூறியிருந்தார்.

இப்போது தாக்குதல் 4வது நாளை எட்டியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் வாயிலாக உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்யா மீண்டும் அறிவித்துள்ள நிலையில் உக்ரைன் அதிபார் வொலடிமிர் ஜெலன்ஸ்கி ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகக் கூறியுள்ள அதிபர் ஜெலன்ஸ்கி, ஆனால் ரஷ்யா சொல்வது போல் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் தனக்கு ஆதரவாக சுதந்திரமான ஒரு படையை உருவாக்குவதாகக் கூறினார். உலகமு முழுவதும் இருந்து வரும் ஆதரவாளர்களைக் கொண்டு அந்த சுதந்திரப் படை உருவாகும் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x