Published : 29 Apr 2016 10:09 AM
Last Updated : 29 Apr 2016 10:09 AM

இலங்கையை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன்: அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதி

இலங்கையை இரண்டாக பிரிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று அந்த நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள் ளார்.

இலங்கையில் புதிய அரசமைப் புச் சட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதைய நாடாளுமன்றம் அரசமைப்பு சட்ட நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டு கருத்துக் கணிப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்களின் ஆலோச னைகளின்பேரில் புதிய அரச மைப்பு சட்டம் வரையறுக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இனப்பிரச்சி னைக்கு தீர்வாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து சுயாட்சியுடன் கூடிய அரசாட்சி முறையை ஏற்படுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் அண்மையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதற்கு சிங்கள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதிபர் அறிவிப்பு

இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா கொழும்பில் நிருபர்களிடம் கூறிய தாவது:

இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கோ, தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் செயல்பாடுகளை முன்னெடுப் பதற்கோ அரசு ஒருபோதும் இடமளிக்காது. இதனை மீறும் எந்தவொரு வரைவுக்கும், தீர்மானத்துக்கும் அரசு ஆதரவு வழங்காது.

இனப்பிரச்சினைக்கு தனிநாடு தான் தீர்வு என்று தமிழக அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தேர்தலை கருத்திற் கொண்டு இவ்வாறு பிரச்சாரம் செய்கி றார்கள். இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழர் கட்சி விளக்கம்

இந்த விவகாரம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியதாவது: வடக்கு, கிழக்கில் தமிழ் மொழி பேசுபவர்கள் அதிகமாக உள்ளனர். எனவே அவர்களுக்கான அதிகா ரத்தை வழங்க வேண்டும் என்று கோருகிறோம். நாட்டை பிரிக்க கோரவில்லை. ஒரே நாட்டுக்குள் ளேயே அதிகாரத்தை கோருகின் றோம். இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

விடுதலைப் புலிகள் கைது

இதனிடையே விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த முன்னாள் தளபதிகள் ராம், நகுலன், கலையரசன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த சிவகரன் ஆகியோர் புலனாய்வுப் பிரிவினரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். எதற்காக அவர்கள் கைது செய்யப்பட் டார்கள் என்பது தெளிவு படுத்தப்படவில்லை. இதனால் தமிழர்கள் மத்தியில் அச்சம் எழுந் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x