Published : 09 Mar 2016 10:53 AM
Last Updated : 09 Mar 2016 10:53 AM

இ-மெயிலை கண்டுபிடித்தது நான்; அங்கீகாரம் வேறொருவருக்கா?- தமிழர் சிவா அய்யாதுரை ஆதங்கம்

இ-மெயிலை நான் கண்டுபிடித் தேன், ஆனால் நிற துவேசம் காரண மாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படு கிறது என்று தமிழர் சிவா அய்யா துரை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ-மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி நிறுவனங்களும் புகழாரம் சூட்டி யுள்ளன. ஆனால் அந்த அங்கீ காரம், கவுரவம் தனக்குச் சொந்த மானது என்று அமெரிக்காவில் வாழும் தமிழர் சிவா அய்யாதுரை உரிமை கோரியுள்ளார். இ-மெயிலுக்கான காப்புரிமையும் அவரிடமே உள்ளது. இந்த விவ காரம் குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய 14-வது வயதில் மின்னஞ்சலுக்கான மென் பொருளை உருவாக்கினேன். அதற்கு இ-மெயில் என்று பெயர் சூட்டினேன். அதற்கு முன்பு ஒரு கணினிக்கும் இன்னொரு கணினிக் கும் நேரடி இணைப்பின் மூலம் தகவல் அனுப்பும் சேவை இருந்தது. அதில் வெறும் வார்த்தை களை (டெக்ஸ்ட் மெசேஜ்) மட்டுமே அனுப்ப முடியும். அதைதான் ரேமண்ட் கண்டுபிடித்தார்.

நான்தான் முதன்முதலில் கணினி மூலம் தகவல்களை அனுப் பும் மென்பொருளை உருவாக் கினேன். நான் கண்டுபிடித்த இ-மெயில், டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. இ-மெயிலில் உள்ள இன் பாக்ஸ், அவுட்பாக்ஸ், சிசி, பிசிசி, டேட்டா, பார்வர்டு, ரீப்ளை உட்பட அனைத்தையும் நான்தான் உருவாக்கினேன். அதற்கான காப் புரிமையை 1982-ல் பெற்றேன். ஆனால் எனக்கான அங்கீகாரம் இன்னும் முழுமையாக கிடைக்க வில்லை. அதற்கு காரணம் நான் இந்தியன், கருப்பு நிறத்தவன், புலம் பெயர்ந்தவன். இன்று சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இது உண்மை, நீதியின் தினம். உண்மைக்கு நிச்சயம் அங்கீ காரம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அய்யாதுரைக்கு ஆதரவாக பலர் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

சிவா அய்யாதுரையின் தந்தை ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்தவர். தாயார் மீனாட்சி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x