Last Updated : 28 Mar, 2016 08:59 AM

 

Published : 28 Mar 2016 08:59 AM
Last Updated : 28 Mar 2016 08:59 AM

ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் தேர்தல்: 3 மாகாணங்களில் சாண்டர்ஸ் வெற்றி

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் தேர்தலில் 3 மாகாணங்களில் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றார். ஹிலாரி கிளிண்டன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

மாகாண வாரியாக நடைபெறும் இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்து வெர்மாண்ட் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் 2-வது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் அலாஸ்கா, வாஷிங்டன், ஹவாய் ஆகிய மாகாணங்களில் நேற்றுமுன்தினம் நடந்த உட்கட்சித் தேர்தலில் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.

ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட 2383 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற வேண்டும்.

ஹிலாரி கிளிண்டன் இதுவரை 1692 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றுள்ளார். தற்போதைய 3 மாகாண வெற்றியையும் சேர்த்து பெர்னி சாண்டர்ஸ் 949 பிரதிநிதிகள் வாக்குகளை வென்றுள்ளார்.

குடியரசு கட்சி நிலவரம்

குடியரசு கட்சியில் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் 739 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்து டெக்சாஸ் செனட்டர் டெட் குரூஸ் 465 பிரதிநிதி கள் வாக்குகள் பெற்றுள்ளார். அந்த கட்சியில் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட 1237 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றாக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x