Published : 21 Mar 2016 10:48 AM
Last Updated : 21 Mar 2016 10:48 AM

அமெரிக்காவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்: இதுவரை 116 பேர் பாதிப்பு

தென்அமெரிக்க நாடுகளை அச் சுறுத்திய ஜிகா வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் வேகமாகப் பரவி வருகிறது. அந்த நாட்டில் இதுவரை 116 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசில், கொலம்பியா, வெனி சூலா உள்ளிட்ட தென்அமெரிக்க நாடுகளிலும் போர்ட்டோரிகா, கியூபா உள்ளிட்ட கரிபீயன் பகுதி நாடுகளிலும் ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

எடிஸ் வகை கொசுக்கள் இந்த வைரஸை பரப்பி வருகின்றன. இதனால் பாதிக்கப்படுபவர் களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை வளர்ச்சி குறைபாடு, நரம்பு மண்டல குறை பாட்டுடன் குழந்தைகள் பிறக் கின்றன.

பிரேசிலில் மட்டும் இத்தகைய குறைபாடுகளுடன் சுமார் 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. எனவே இப் போதைக்கு பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று தென்அமெரிக்க நாடுகளின் அரசுகள் அறிவுறுத்தி யுள்ளன.

மேலும் உடல் உறவு மூலமும் ஜிகா வைரஸ் பரவுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை யடுத்து கியூபா, போர்ட்டோரிகா உள்ளிட்ட நாடுகளில் ஆணுறைக ளின் விலை குறைக்கப்பட் டுள்ளது.

இதுவரை தென்அமெரிக்க நாடுகளை மட்டுமே அச்சுறுத்தி வந்த ஜிகா வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. அந்த நாட்டில் சுமார் 33 மாகாணங்களில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் கண்டறி யப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் 116 பேர் வைரஸால் பாதிக் கப்பட்டுள்ளனர். இந்த எண் ணிக்கை மிக அதிகமாக இருக்கக் கூடும், ஆனால் மக்களிடம் பீதியை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அமெரிக்க அரசு எண்ணிக்கையை குறைத்துக் கூறுகிறது என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வறிக்கையில் நியூ யார்க், லாஸ்ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 50 நகரங்களுக்கு ஜிகா வைரஸ் அச்சுறுத்தல் அதிகம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. எனவே மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x