Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM

இலங்கையில் மின்னேரியா சரணாலயத்தில் ஒரே பிரசவத்தில் 2 குட்டிகளை ஈன்ற யானை

2 குட்டிகளுடன் தாய் யானை சுராங்கி

கொழும்பு

இலங்கை நாட்டில் ஒரே பிரசவத்தில் யானை 2 குட்டிகளை ஈன்ற அரிய சம்பவம் நடந்துள்ளது.

இலங்கையின் மின்னேரியா யானைகள் சரணாலயத்தில் உள்ளபின்னவாலா யானைகள் முகாமில் சுராங்கி என்ற பெண் யானை உள்ளது. கருவுற்றிருந்த இந்த யானைநேற்றுமுன்தினம் 2 ஆண் குட்டிகளை ஒரே பிரசவத்தில் ஈன்றது.

1941-ம் ஆண்டில் இலங்கையில் ஒரு பெண் யானை 2 குட்டிகளை ஈன்றது. அதன் பிறகு தற்போதுதான் ஒரு யானை ஒரே பிரசவத்தில் 2 குட்டிகளை ஈன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து பின்னவாலா யானைகள் முகாமின் தலைவர் ரேணுகா பண்டாரநாயகே கூறும்போது, “25 வயதான இந்த பெண் யானை நேற்று 2 குட்டிகளை ஈன்றுள்ளது. 2 குட்டிகளும் ஆரோக்கியமான நிலையில் உள்ளன.

வழக்கமான குட்டிகளை விட இந்த குட்டிகள் அளவில் சற்று சிறியதாக உள்ளன. இருப்பினும் அவை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் தாயுடன் அந்த குட்டிகள் விளையாடி வருகின்றன.

இந்த சுராங்கி யானை 2009-ல் முதன்முறையாக குட்டி ஈன்றது. அதன்பிறகு தற்போதுதான் குட்டியை ஈன்றுள்ளது. கரோனா வைரஸ் பெருந்தொற்று இருப்பதால் யானைகள் முகாமுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவில்லை. சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும்போது இந்த குட்டிகள் பொதுமக்களுக்குக் காட்டப்படும்" என்றார்.-ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x