Last Updated : 23 Dec, 2015 05:14 PM

 

Published : 23 Dec 2015 05:14 PM
Last Updated : 23 Dec 2015 05:14 PM

நெருக்கடி நிலை பிறப்பிக்கும் முன் பிரதமர், ராணுவ தளபதியுடன் ஆலோசனை நடத்தினேன்: முஷாரப் ஒப்புதல்

பாகிஸ்தானில் 2007ம் ஆண்டு நெருக்கடி நிலை பிறப்பிக்கும் முன்பாக அப்போதைய பிரதமர் சவுகத் அஜீஸ், ராணுவ தளபதி பர்வீஸ் கயானி ஆகியோரை கலந்து ஆலோசித்தேன். அவர்களும் அதற்கு பொறுப்பு என்றார் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஷாரப்.

2007ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி அரசமைப்புச்சட்டத்தை ரத்து செய்து நெருக்கடி நிலை பிறப்பித்தார் என்பதற்காக 2013ம் ஆண்டு முஷாரப் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பின் கூட்டு விசாரணைக்குழுவிடம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் இதை முஷாரப் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ராணுவ தளபதி பர்வீஸ் கயானியும் இந்த வழக்கில் பிரதான குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளார் முஷாரப்.

2007ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற கயானி நெருக்கடி நிலையை ரத்து செய்யவில்லை. இதனால் அவரும் பிரதான குற்றவாளியாவார்.

கயானி தவிர, அப்போது ராணுவத்தின்உயர் அதிகாரப்பொறுப்பில் உள்ள அதிகாரிகள், அப்போதைய பிரதமர் சவுகத் அஜீஸ் ஆகியோரையும் கலந்து ஆலோசனை நடத்தி அதன்பிறகே நெருக்கடி நிலையை பிறப்பிக்க முடிவு எடுத்தேன்..

அப்போதைய பிரதமர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்கள் சொன்ன ஆலோசனைபடியே நெருக்கடி நிலையை பிறப்பித்தேன்.எனக்கு இதில்பொறுப்பு இல்லை.

நெருக்கடி நிலையை ஆதரித்து அஜீஸ் எழுதிய குறிப்புகள் அரசு ஆவணங்களிலிருந்து மாயமாகி உள்ளது.இதை யாரோ திட்டமிட்டு செய்துள்ளனர். இவ்வாறு முஷாரப் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் இப்போதுதான் முதல்முறையாக கயானி, முன்னாள் பிரதமர் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை பொறுப்பாக்கி தேசதுரோக வழக்கில் இழுக்கும் நடவடிக்கையி்ல இறங்கியுள்ளார் முஷாரப் என டான் பத்திரிகை தெரிவித்துள்ளது..

ஆறுமாத காலம் ராணுவ தளபதி பதவி வகித்தபிறகு 2013ல் அந்த பதவியிலிருந்துஓய்வுபெற்றார் கயானி.முஷாரப் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் இதுவரை பதில் பேசவில்லை.

ராணுவதலைமை தளபதி பதவிக்கு கயானியை தேர்வுசெய்தது முஷாரப்தான்.ஆனால் தேர்தலில் போட்டியிடுவதற்காக 2013ல் நாடு திரும்பி வந்தபோது பல்வேறு வழக்குகளில் தொடர்புப்படுத்தி தன்னை கைதுசெய்து இழிவுக்குஉள்ளாக்கியபோது காப்பாற்ற கயானி முன்வரவில்லை என்பதால் முஷாரப் அவர்மீது அதிருப்தியில் உள்ளார்.

அஜீஸும் முஷாரபால் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்யப்பட்டவர். அவர் 2007ல் தனது பதவிக்கால முடிந்ததும்நாட்டை விட்டு சென்றவர்.அதன்பிறகு நாடு திரும்பவில்லை.

1973ம்ஆண்டு அரசமைப்புச்சட்டத்தின்படி அரசமைப்புச்சட்டத்தை ரத்து செய்வது தேசதுரோக குற்றம் ஆகும்., இது மரண தண்டனைக்குரியதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x