Published : 29 Dec 2015 09:50 AM
Last Updated : 29 Dec 2015 09:50 AM

ட்விட்டரில் இணைந்தது ‘ஈபிள் கோபுரம்’: தாஜ் மஹால், சுதந்திரதேவி சிலை வாழ்த்து

உலக அதிசயங்களில் ஒன்றான ‘ஈபிள் கோபுரம்’ சமூக இணைய தளமான ட்விட்டரில் இணைந் துள்ளது. இதற்கு தாஜ் மஹால், சுதந்திரதேவி சிலை ஆகியவற் றின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப் பட்டுள்ளது.

கஸ்டவ் ஈபிள் என்ற கட்டிடக் கலை வல்லுநரால் 126 ஆண்டு களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஈபிள் கோபுரம் சார்பில், @LaTourEiffel என்ற பெயரில் ட்விட்ட ரில் புதிய பக்கம் தொடங்கப் பட்டுள்ளது.

“கடந்த 1889-ம் ஆண்டில் பிறந்த பிரான்ஸின் பாரீஸ் நகரவாசியான நான் இப்போது ட்விட்டரில் இணைந் துள்ளேன்” என ‘லா கிராண்ட் டேம்’ என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தின் முதல் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதில் “எனது சகோதரியை ட்விட்டருக்கு வரவேற்கிறேன்” என சுதந்திரதேவி சிலை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல முகலாயப் பேரரசின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழும் உலகப் புகழ் பெற்ற தாஜ் மஹால், நியூயார்கின் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகமான லோவுர் ஆகியவை சார்பிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “ஈபிள் கோபுரம் தொடர்பான செய்திகள், வரலாற்று உண்மைகள் ஆகியவற்றை தெரி விப்பதற்காக ட்விட்டரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது” என்றனர்.

1,063 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தைக் காண்பதற்காக ஆண்டுதோறும் உலகம் முழுவ திலுமிருந்து 70 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x