Last Updated : 21 Nov, 2015 09:55 AM

 

Published : 21 Nov 2015 09:55 AM
Last Updated : 21 Nov 2015 09:55 AM

சீனாவில் முதல் முறையாக ரோபோ மூலம் சிறுநீரக அறுவை சிகிச்சை: 6 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது

சீனாவில் முதல் முறையாக மருத்துவ ரோபோ மூலம் ஆறு வயது சிறுவனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப் பட்டது.

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டுமின்றி, மருத்துவ துறையிலும் சீனா அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. நேரத்தை மிச்சப்படுத்தி மனிதர்களுக்கான அறுவை சிகிச்சைகளை ஆபத்தின்றி நடத்தும் முயற்சிகளில் சீன மருத்துவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற னர்.

அந்நாட்டின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த ஆறு வயது சிறுவனுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது.

இதனால் வழக்கம் போல சிறுநீர் கழிப்பதில் சிறுவனுக்கு சிரமம் ஏற்பட்டது. இதைக் கண்டறிந்த மருத்துவர்கள், நவீன தொழில்நுட்ப உதவியுடன் மருத்துவ ரோபோ மூலம் அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக குவாங்சோ நகரில் உள்ள மருத்துவமனையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பின்னர், கடந்த 16-ம் தேதி சிறுவனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரம்மாண்ட திரைக்கு முன் அமர்ந்த மருத்துவர்கள் அங்கிருந்தபடி, அறுவை சிகிச்சை அரங்கில் கிடத்தப்பட்டிருந்த சிறுவனுக்கு, மருத்துவ ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்தனர். சுமார் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. மருத்துவ ரோபோ மூலம் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சை வழக்கமான லேப்ரோஸ்கோபிக் மூலம் மேற் கொள்ளப்படுவதை காட்டிலும் குறைந்த நேரத்தில் முடிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x