Published : 27 Jun 2014 10:34 AM
Last Updated : 27 Jun 2014 10:34 AM

ஜப்பானில் இந்த ஆண்டின் முதல் மரண‌ தண்டனை நிறைவேற்றம்

ஜப்பானில் இந்த ஆண்டின் முதல் மரண‌ தண்டனை வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. 2012-ம் ஆண்டு டிசம்பரில் ஷின்ஷோ அபே அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்பட்டுள்ள 9-வது மரண‌ தண்டனை இதுவாகும்.

2007-ம் ஆண்டு ஒரு வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி உட்பட மூவரை கத்தியால் குத்திக் கொன்ற குற்றத்துக்காக மசானொரி கவாசகி (68) என்ற கைதிக்கு மரண தண் டனை நிறைவேற்றப்பட்டது.

"இது ஒரு மிகவும் கொடூரமான சம்பவம். தீர விசாரித்த பிறகே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது" என சட்ட அமைச்சர் சடாகசு தானி காகி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, 1986 மற்றும் 1989ம் ஆண்டுகளில் இரண்டு பேரைக் கடத்திக் கொன்ற குற்றத் துக்காக முன்னாள் காவல்துறை அதிகாரியான ஷிஜியோ ஒகாசாகிக்கு(60), 2004-ம் ஆண்டு மரண‌ தண்டனை விதித்து தீர்ப்ப ளிக்கப்பட்டது. ஆனால் அவர் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு சிறையிலேயே இறந்துவிட்டார்.

மேலும், நிரபராதிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதும் அங்கு நடக்கின்றது. ஐவோ ஹக்காமடா எனும் 78 வயதான நபர் சாட்சியங்கள் திரிக்கப் பட்டதால் செய்யாத கொலைக் குற்றத்திற்காகப் பல ஆண்டுகள் மரண தண்டனை கைதியாக இருந்து இந்த ஆண்டுத் தொடக்கத்தில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

தொழிற்புரட்சி மிக்க ஜனநாயக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து ஜப்பானில்தான் மரண தண்டனை அதிகம் நிறைவேற்றப் படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மக்களிடையே மரண தண்டனைக்கு ஆதரவு பெருகி வருவதைப் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜப்பான் சிறைகளில் 120 மரண தண்டனைக் கைதிகள் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் அரசு கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக 2011-ம் ஆண்டு முழுவதும் மரண தண்டனையை நிறைவேற்ற வில்லை. இதனால் மரண தண்டனை குறித்த விவாதம் சற்றே ஓய்ந்தது. ஆனால் 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஜப்பானில் மரண தண்டனைக் குற்றவாளிகள் நீண்டகாலம் தனிமைச் சிறையில் அடைக்கப்படு கின்றனர். அவர்களின் தண்டனை நிறைவேற்றப்படும் சில மணி நேரங்களுக்கு முன்புதான் அந்தத் தகவல் குற்ற‌வாளிகளுக்குச் சொல் லப்படுகிறது என்பதால் ஜப்பானின் தண்டனை முறை மிகவும் குரூரமானது என்கின்றன சர்வதேச மனித உரிமை அமைப்புகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x