Published : 10 Feb 2021 02:05 PM
Last Updated : 10 Feb 2021 02:05 PM

ஈரானில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்து: தன்னார்வலர்களுக்கு பரிசோதனை

ஈரானில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்து தன்னார்வலர்களுக்கு பரிசோதனைக்காக கடந்த சில நாட்களாக போடப்பட்டு வருகிறது.

ஈரானில் ராசி கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஈரானின் நூறு வருட பழமையான சீரம் பரிசோதனை மையம் இந்த தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தன்னார்வலர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸீரம் கரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு கடந்த மாதம் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்துகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஈரானில் சமீப நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்தியக் கிழக்கு நாடாக உள்ளது.

முன்னதாக, ''அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடமிருந்து கரோனா தடுப்பு மருந்துகளை ஈரான் வாங்காது. அவர்களது தடுப்பு மருந்துகளை நம்ப முடியாது.

பிரான்ஸின் தடுப்பு மருந்துகளும் நம்பிக்கைக்குரியது அல்ல. நாங்கள் எங்களுக்கு கரோனா தடுப்பு குறித்து நம்பகத்தன்மை எங்கு உள்ளதோ அங்கு வாங்குவோம்'' என்று ஈரான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x