Published : 05 Feb 2021 03:15 AM
Last Updated : 05 Feb 2021 03:15 AM

சவுதி உட்பட பல நாடுகளின் சிறைகளில் 7,000 இந்தியர்கள்

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் கூறியதாவது:

பல நாடுகளில் ரகசியக் காப்பு உரிமைகள் வலுவானதாக உள்ளன. இதன் காரணமாக, தங்கள் நாட்டு சிறைகளில் அடைக்கப்படும் வெளிநாட்டவர்கள் குறித்து அவை பெரும்பாலும் தகவல் அளிப்பதில்லை. சம்பந்தப்பட்ட நபர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே இதுதொடர்பான தகவல்கள் பகிரப்படுகின்றன.

அவ்வாறு நமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் பல்வேறு நாடுகளின் சிறைகளில் 7,139 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியா சிறைகளில் 1,599 இந்தியர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 898, நேபாளத்தில் 886, மலேசியாவில் 548, குவைத்தில் 536 என்ற எண்ணிக்கையில் இந்தியக் கைதிகள் உள்ளனர்.

இவ்வாறு இணையமைச்சர் முரளிதரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x