Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM

ரஷ்ய அதிபர் புதினின் விமானத்தில் முக்கிய உதிரி பாகங்கள் திருட்டு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 'இலுசின் II-80' என்ற அதிநவீன விமானத்தில் பயணம் செய்கிறார். அணுகுண்டு தாக்குதல், இயற்கை பேரிடரின் போது அதிபரை காக்கும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வகையை சேர்ந்த 4 விமானங்கள் உள்ளன.

இதில் ஒரு விமானம் பராமரிப்புக்காக டகோன்ராக் நகரில் உள்ள விமானப் படை தளத்தில்நிறுத்தப்பட்டிருந்தது. இந்த விமானத்தில் இருந்து 39 ரேடியோ சாதனங்கள் திருடப்பட்டிருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இவை தங்கம், பிளாட்டினத்தில் தயாரிக்கப்பட்டவை. இதற்காகவே இந்த முக்கிய உதிரி பாகங்கள் திருடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த திருட்டு தொடர்பாக 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x