ஈரானில் 8,66,821 பேர் கரோனாவால் பாதிப்பு

ஈரானில் 8,66,821 பேர் கரோனாவால் பாதிப்பு
Updated on
1 min read

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 12,460 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரனின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 12,460 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,66,821 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 453 பேர் பலியான நிலையில், ஈரானில் கரோனா பலி எண்ணிக்கை 45,255 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், முக்கிய நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

ஈரானில் சமீபநாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வடபகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in