Published : 22 May 2014 10:30 AM
Last Updated : 22 May 2014 10:30 AM

குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட்- அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

குளிரூட்டி கருவி பொருத்தப் பட்ட ஹெல்மெட்டை அமெரிக்க ராணுவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். போர்க் களத்தில் வெயிலின் தாக்கத்திலி ருந்து வீரர்களைக் காக்க இந்த கண்டுபிடிப்பு உதவும்.

மிகக் குறைந்த எடையுள்ள இந்த கருவி, ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருக்கும். இது காற்றின் தட்பவெப்பத்தை சீரான நிலையில் வைத்திருக்க உதவும். வீரர்கள் சுவாசிப்பதற்கான தூய்மை

யான காற்றை வடிகட்டி அனுப்பும் செயலையும் இந்த கருவி மேற்கொள்ளும். இதற்கு மின்சா ரத்தை வழங்கும் பேட்டரியை இடுப் பில் கட்டிக் கொள்ள வேண்டும்.

ரசாயனம், கதிர்வீச்சு, அணுக் கதிர் தாக்குதலில் இருந்து வீரர் களை காக்கும் வகையிலான சுவாசக் கருவி பொருத்தப்பட்ட ஹெல்மெட்டை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை எட்ஜ்வுட் ரசாயன உயிரியல் மைய விஞ்ஞானிகள் 2013-ம் ஆண்டிலிருந்து மேற் கொண்டு வருகின்றனர். இந்த மையம் அமெரிக்க ராணுவத்தின் ஆராய்ச் சிப் பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இப்போது வடிவமைக்கப் பட்டுள்ள ஹெல்மெட்டில் சுவாசத்திற்கான முகமூடி பொருத்தப்பட்டு ள்ளது. இதில் காற்றை குளிரூட்டும் கருவி பொருத்தப்பட் டுள்ளது. மிகக் குறைந்த எடையுடன் இருக்கும் இக்கருவி, குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும் வகையில் உருவாக் கப்பட்டுள்ளது. அதை அணிந்திருப்பவருக்கு எந்தவித மான அசவுகரியங்களும் ஏற்படாது.

குளிரூட்டி கருவி பொருத்தப்பட இந்த ஹெல்மெட் தற்போது பரிசோதனைக் கட்டத்தில் உள்ளது. மேலும் சில மாற்றங்களை செய்ய தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தகவல் தொடர்புக் கருவிகளை அந்த ஹெல்மெட்டிலேயே பொருத்து வதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x