Published : 14 Sep 2020 04:13 PM
Last Updated : 14 Sep 2020 04:13 PM

ஜப்பானின் புதிய பிரதமராகிறாரா யோஷிஹைட் சுமா?

ஷின்சோ அபேவின் ராஜினாமாவிற்குப் பிறகு யோஷிஹைட் சுமா ஆளும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஜப்பானின் பிரதமராக அவர் தேந்தெடுக்கப்பட இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாகிரேடிக் கட்சி தலைமையில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு செப்டம்பர் 1 ஆம் தேதி நடந்தது. இதனைத் தொடர்ந்து கட்சியை தலைவரை தேந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இதில் அபேவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் யோஷிஹைட் சுமா 377 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சுகாவின் வெற்றி எதிர்பார்த்த வெற்றி என்று ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் சுகா ஜப்பானின் பிரதமராக விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுகா ஷின்சே அபேவின் வலதுகரமாக செயல்பட்டவர். ஜப்பானில் வெளிநாட்டு சுற்றுலாத் துறையை வளர்ச்சி அடைவதற்கும், செல்போன் பில்களைக் குறைப்பதற்கும், விவசாய ஏற்றுமதியை அதிகரித்ததற்கும் சுகா முன்னரே பாராட்டப்பட்டிருகிறார்.

ஜப்பானில் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் ஷின்சோ அபே (வயது 65). ஜப்பானின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான அவர் அதிக காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையைக் கொண்டுள்ளவர். ஜப்பானின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைய உதவிய தலைவர் என்ற பெருமையையும் கொண்டவர்.

சில ஆண்டுகளாக, குடல் பாதிப்பு காரணமாக ஷின்சோ அபே அவதிப்பட்டு வருகிறார். இரண்டு முறை மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்று வந்த நிலையில், ஷின்சோ அபே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் உடல் நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x