Last Updated : 28 Sep, 2015 02:18 PM

 

Published : 28 Sep 2015 02:18 PM
Last Updated : 28 Sep 2015 02:18 PM

படகு வெடிப்புச் சம்பவம்: உயிர் தப்பினார் மாலத்தீவு அதிபர்

மாலத்தீவு அதிபர் யாமின் அப்துல் கயூம் பயணம் செய்த விரைவுப் படகில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் கயூம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்ற படகில் திடீரென 'வெடிப்பு'ச் சம்பவம் நிகழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யமீன் அப்துல் கயூம் உயிர் தப்பினார். இருப்பினும், அவரது மனைவி உள்ளிட்ட பலருக்கு காயம் ஏற்பட்டது.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு தனது மனைவி ஃபாத்திமா இப்ராகிமுடன் மாலத்தீவு அதிபர் யாமின் அப்துல் கயூம் புனிதப் பயணம் மேற்கொண்டார். அதனை முடித்துக் கொண்டு விமான நிலையத்திலிருந்து விரைவு விசைப்படகில் மாலத்தீவு திரும்பிகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

படகின் இன்ஜின் அறையிலிருந்து பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டதாக அமைச்சர் முகமது ஷெரீப் தெரிவித்துள்ளார்

இந்த வெடிப்புச் சம்பவத்தில், அதிபரின் மனைவி, உதவியாளர் மற்றும் பாதுகாவலர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மாலத்தீவு தலைநகரில் உள்ள இந்திரா நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதன் காரணம் தெரியாத நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x