Published : 29 Aug 2020 01:25 PM
Last Updated : 29 Aug 2020 01:25 PM

ஈரானை உலுக்கிய ஆணவக் கொலை: தந்தைக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனை

ஈரானில் 14 வயது சிறுமி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அச்சிறுமியின் தந்தைக்கு 9 ஆண்டு சிறைத் தணடனை விதிக்கப்பட்டுள்ளது.

14 வயதான ரோமினா அஷ்ரப்பின் மரணம்தான் ஈரானில் மே மாதம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரோமினா அஷ்ரப்பின் காதலை ஏற்க மறுத்த அவர் தந்தை அவரை ஆணவ கொலை செய்ததை தொடர்ந்து இந்த விவகாரம் ஈரானில் பூதாகரமாக கிளம்பியது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வடக்கு மேற்கு பகுதியில் இச்சம்பவம் நடந்தது. இந்த ஆணவ கொலைத் தொடர்பாக ரோமினா அஷ்ரப்பின் தந்தை ரேசா அஷ்ரப் கைது செய்யப்பட்டார்.

ரோமினாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பலரும் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். ரோனிவின் மரணத்துக்கு நீதி கேட்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியும் சமூக வலைதளங்களில் பலரும் #RominaAshrafi என்று டிரெண்ட் செய்தத்தால் சர்வதேச அளவில் இவ்வழக்குக்கு வெளிச்சம் கிடைத்தது.

இந்த ஆணவ கொலைத் தொடர்பாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வருத்தம் தெரிவிதார். மேலும் இந்த ஆணவ கொலைத் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் ஈரான் அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் ரேசா அஷ்ரப் குற்றவாளி என்று உறுதிச் செய்யப்பட்டதால் அவருக்கு 9 வருடம் சிறைத் தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆணவக் கொலைக்கு இந்தத் தண்டனை குறைவு என்று அங்குள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஈரானில் நடைபெறும் மரணங்களில் 20% ஆணவ கொலைகள் என்று என்று அங்குள்ள தன்னார்வ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x