Last Updated : 23 Aug, 2020 05:12 PM

 

Published : 23 Aug 2020 05:12 PM
Last Updated : 23 Aug 2020 05:12 PM

தீவிர கரோனா வைரஸ் நுரையீரலை என்னதான் செய்கிறது? : விஞ்ஞானிகள் விளக்கம்

கரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ள நோயாளிகளின் நுரையீரல் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும் திசுக்களுக்கு ஏற்படும் சேதம் பற்றியும் ஜெர்மன் விஞ்ஞானிகள் உயர் தொழில்நுட்ப இமேஜிங் மூலம் கண்டுப்பிடித்துள்ளனர்.

நுரையீரலின் ரத்தக் குழாய்கள் மற்றும் நுண் காற்றுப்பைகளில் கரோனா ஏற்படுத்தும் மாற்றங்களை உயர் தொழில்நுட்ப இமேஜிங் மூலம் படம்பிடித்துள்ளதால் கரோனா சிகிச்சையில் இது பெரிய உதவிபுரியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

eLife என்ற இதழில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. இது ஒரு புதிய எக்ஸ்-ரே உத்தியாகும், கரோனா பாதித்த நுரையீரல் திசுக்கள் பற்றிய முப்பரிமாண ஹை ரிசல்யூஷன் படம் நமக்குக் கிடைக்கும்.

ரத்தக் குழாய்களில் ஏற்படும் மாற்றம், அழற்சி, அல்வியோலி என்று அழைக்கப்படும் நுரையீரலின் மிக நுண்ணிய காற்றுப்பைகளின் சுவர்களில் புரோட்டீன்களின் படிவுகள் மற்றும் செத்த செல்களின் படிவுகள் ஆகியவற்றை இந்த புதிய இமேஜ்ங் உத்தி மூலம் துல்லியமாகக் காண முடியும்.

கரோனாவினால் நுரையீரலில் ஏற்படும் இந்த மாற்றங்களினால் அதன் வாயுப் பரிமாற்றம் ஒன்ரு கடினமாகிறது, அல்லது சாத்தியமற்றதாகி விடுகிற்து.

இந்த புதிய இமேஜிங் மூலம் நுரையீரலில் கரோனா பெரிய திசுத் தொகுதிகளில் ஏற்படுத்தும் மாற்றம் அல்லது திசு சேதத்தை படம்பிடித்துக் காட்ட முடியும்

குறிப்பாக சிறிய ரத்தக் குழாய்கள் அதன் கிளைகளை முப்பரிமாணத்தில் இந்த இமேஜிங் தடம் காண்கிறது. மேலும் நுரையீரல் அழற்சி இடத்தில் நோய் எதிர்ப்பாற்றலின் செல்களின் இருப்பையும், நுண்ணிய காற்றுப்பை சுவர்களின் அடர்த்தியையும் இந்த இமேஜிங் காட்டுகிறது.

இந்த உத்தி மூலம் சிகிச்சை முறைகளை புதிதாக வடிவமைக்க முடியும். கரோனா நுரையீரலுக்கு ஏற்படுத்தும் சேதத்தைத் தடுக்க முடியும் என்று இந்த ஜெர்மன் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அதாவது கரோனா தாக்கம் நுரையீரலில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை முதலில் தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் இலக்கு நோக்கிய இடையீட்டு மருந்துகளை தயாரிக்க முடியும் என்று இந்த ஆய்வின் சக ஆசிரியர் டேனி ஜோனிக் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் வெளியான ஆய்வில் நுரையீரலில் ரத்தக் கட்டுதான் கரோனா மரணத்துக்கு பெரிய காரணம் என்று தெரியவந்ததையடுத்து இந்த புதிய ஆய்வில் நுரையீரலில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய புதிய உயர் தொழில்நுட்ப எக்ஸ்-ரே இமிஜிங் முறையை இந்த விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x