Last Updated : 15 Sep, 2015 03:29 PM

 

Published : 15 Sep 2015 03:29 PM
Last Updated : 15 Sep 2015 03:29 PM

பிரான்ஸ் முஸ்லிம் மாநாட்டு மேடையில் மேலாடையின்றி புகுந்த பெண்களால் பரபரப்பு

பிரான்ஸில் இஸ்லாமிய மாநாட்டில் இரு பெண்கள் மேலாடை இல்லாமல் புகுந்து கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்களை ஆண்கள் அடிக்க உரிமை உண்டா? என்ற தலைப்பில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் விவாத மாநாடு நடந்தது. இதில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கலந்துகொண்டு பேசினர். அப்போது திடீரென மேடை மீதேறிய 2 பெண்கள் தங்களது மேலாடையை அகற்றி பேச்சாளரை விரட்டி, மைக்கை பிடித்து பெண்ணிய கோஷங்களை பிரஞ்சு மற்றும் அரபு மொழியில் எழுப்பினர்.

இருவரும் தங்களது உடலில், 'என்னை யாரும் அடக்கவும் முடியாது அடிக்கவும் முடியாது' என்ற வாசகத்தை எழுதியிருந்தனர். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அந்த இரு பெண்களையும் கீழே தள்ளிவிட்டு அடித்தனர். உடனடியாக அங்கிருந்த போலீஸார் பாதுகாப்புக்காக பெண்களை கைது செய்து தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் குறித்து வெளியான வீடியோ காட்சியில், அந்தப் பெண்களை சிலர் கீழே தள்ளி, எட்டி உதைக்கும் காட்சிகள் வெளியானதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெண்களுக்கு எதிரான இந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு தடை கோரி பிரான்ஸில் இணைய கையெழுத்து இயக்கமும் முன்னதாக நடத்தப்பட்டது. இதில் சுமார் 6 ஆயிரம் பேர் கையெழுத்திட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x