Published : 19 Jun 2020 11:42 AM
Last Updated : 19 Jun 2020 11:42 AM

இந்திய-சீனா எல்லையில் கல்வான் நதியின் மீது அணையைக் கட்டுகிறதா சீனா ?

கல்வான் நதியின் போக்கைத் தடுக்கும் விதமாக இந்திய-சீன எல்லையில் அணையைக் கட்டுகிறதா சீனா என்ற கேள்விக்கு சீனா பதிலளிக்க மறுத்து விட்டது.

முக்கிய அம்சங்கள்:

கல்வான் நதியின் ஓட்டத்தைத் தடுக்கும் விதமாக இந்திய-சீன எல்லையில் சீனா அணைக்கட்டுகிறதா என்ற கேள்விக்கு சீனா பதிலளிக்க மறுத்து விட்டது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் பெரிய அளவில் ராணுவ வீரர்களையும் கட்டுமானச் சாதனங்களையும் இறக்கியுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் அங்கு அணைக்கட்டவிருப்பதாக சில செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் ஸாவோ லிஜியன் இது தொடர்பாக பதில் எதுவும் அளிக்க மறுத்து விட்டார், அதே போல் பலியான சீன வீரர்கள் தொடர்பான கேள்விகளையும் அவர் புறக்கணித்தார்.

ஹாக் ஐ 360-ம் படி புதிய செயற்கைக்கோள் படங்கள் காட்டுவது என்னவெனில் பல லாரிகளில் கட்டுமானப்பொருட்களுடன் ராணுவப்படைகளும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது என்பதே. பிஎல்ஏ ராணுவத்தினருக்கான முகாம்களும் அங்கு தென்பட்டன.

புதிய போர் தண்ணீருக்கானதா?

பல நூற்றாண்டுகள் முன்பாக சீன தத்துவ ஞானி சுன் ட்சூ, “ராணுவத்தின் வடிவம் தண்ணீரின் வடிவம் போல் உள்ளது. ராணுவ உத்திகள் தண்ணீருக்கானது” என்று தனது ஆர்ட் ஆஃப் வார் என்ற நூலில் அவர் தெரிவித்துள்ளார்.

டோக்ளாம் நெருக்கடியின் போது, அசாம், உத்தரப்பிரதேச வெள்ளத்திற்குப் பிறகு சீனா தனது நீரியல் தரவுகளை வெளியிட மறுத்தது.

2016-ல் யுனான் அணையிலிருந்து மேகாங் நதிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வியட்னாம் சீனாவிடம் கெஞ்சியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x