Last Updated : 09 May, 2020 09:28 AM

 

Published : 09 May 2020 09:28 AM
Last Updated : 09 May 2020 09:28 AM

நான் முகக்கவசம் அணியமாட்டேன்: அதிபர் ட்ரம்ப்- துணை அதிபர் மைக் பென்ஸ் உதவியாளருக்கு கரோனா பாஸிட்டிவ்

அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸின் உதவியாளரும், செய்தித்தொடர்பாளருமான கேட்டி மில்லருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் பணியாற்றிவரும் நபர்களில் 2-வது நபருக்கு இந்த வாரத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் அதிபர் ட்ரம்பின் பாதுகாப்பு படையில் இருந்த ராணுவ வீரர் ஒருவருக்கு கரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.

துணை அதிபர் பென்ஸ் உதவியாளர் கேட்டி மில்லரி்ன் கணவர் ஸ்டீஃபன் மில்லர், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த ஆலோசகர். இப்போது கேட்டி மில்லருக்கு கரோனா தொற்று இருப்பதால்,அவரின் கணவர் ஸ்டீஃபன் மில்லருக்கு சோதனை நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும். ஸ்டீஃபன் மில்லர் தொடர்ந்து வெள்ளை மாளி்கைக்குள் பணியாற்றி வருகிறார்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கரோனா வைரஸ் பரவுவது குறித்து தான் கவலைப்படவில்லை என்றும் தொடர்ந்து நோய்தடுப்புக்கான நடவடிக்கைகளை தான் செய்துவருவதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

அதிபர் ட்ரம்ப்புக்கும், துணை அதிபர் மைக் பென்ஸுக்கும் நாள்தோறும் மருத்துவ அதிகாரிகள் கரோனா வைரஸ் பரிசோதனையை நடத்தி வருகின்றனர்.

துணை அதிபர் பென்ஸ் நேற்று ஐயோவா மாநிலத்துக்கு மதத் தலைவர்களைச் சந்தித்து பேசும் கூட்டத்துக்கு செல்ல இருந்தார். ஆனால், பென்ஸ் உதவியாள் கேட்டி மில்லருக்கு கரோனா இருந்ததைத்தொடரந்து துணை அதிபர் பென்ஸுடன் பயணிக்க இருந்த அதிகாரிகள் 6 பேர் கேட்டி மில்லருடன் தொடர்பில் இருந்ததால் அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. விமானம் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன் அந்த அதிகாரிகள் 6 பேரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.

கரோனா பாஸிட்டிவாக கேட்டி மில்லர் இருந்தபோதிலும் அவருக்கு உடல்ரீதியாக எந்தவிதமான சுகக்குறைவும் இல்லாமல் பணியாற்றி வருகிறார். மேலும், கேட்டிமில்லருடன் தொடர்பில் இருந்த 6 அதிகாரிகளுக்கும் எந்த விதமான கரோனா அறிகுறிகளும் தெரியவில்லை.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில் “ வெள்ளை மாளிகையில் கரோனா வைரஸ் பரவுவதை நான் எதி்ர்பார்த்ேதன். அதற்காக நான் கவலைப்படவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்ைககளை எடுத்து வருகிறேன். முகக்கவசம் அணிந்தால் பாதுகாப்பாகத்தான் இருக்கும். ஆனால், மற்ற தலைவர்களைச் சந்திக்கும் போதும், பேசும் முகக்கவசம் இருந்தால் அது சரியானதாக இருக்காது என்பதால், அதை அணியவில்லை” எனத் தெரிவித்தார்

அமெரிக்க மக்கள் அனைவரும் கரோனாவிலிருந்து காக்க முக்ககவசம் அணிய வேண்டும் என வலியுறுத்திவரும் அதிபர் ட்ரம்ப் தான் முகக்கவசம் அணிவதில்லைஎனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x