Published : 07 May 2020 03:41 PM
Last Updated : 07 May 2020 03:41 PM

ரஷ்யாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 11,231 பேருக்கு கரோனா தொற்று

ரஷ்யாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 11,231 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள் தரப்பில், “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11, 231 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,77,160 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் உயிரிழக்க கரோனாவால் பலியானவர்கள்
எண்ணிக்கை 1,625 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரு நாள் மட்டும் 6,703 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவில் இதுவரை கரோனா தொற்றிலிருந்து 21,327 பேர் குணமடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் கரோனா வைரஸைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அதிபர் புதின் எடுத்து வருகிறார். ரஷ்யா தற்போது ஊரடங்கின் ஐந்தாவது வாரத்தில் உள்ளது. கரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 38,20,703 பேர் பாதிக்கபட்டுள்ளனர். 2,65,094 பேர் பலியாகியுள்ளனர். 13,03,122 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x