Published : 04 May 2020 07:42 AM
Last Updated : 04 May 2020 07:42 AM

இந்த ஆண்டு இறுதிக்குள் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கிடைத்துவிடும்: அதிபர் ட்ரம்ப் உறுதி

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க ஆய்வாளர்கள் தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிடுவார்கள், அதற்கான கட்டத்தை நெருங்கி வருகிறோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவி்த்துள்ளார்

சீனாவில் உருவாகிய கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சறுத்தி வருகிறது. சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பைவிட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும்தான் கரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை உலகம் முழுவதும் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.48 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.11,53 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இதுவரை கரோனா வைரஸால் அந்நாட்டில் 11.88 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 68 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன், இந்தியா, ஆஸ்திரலேயா, சீனா என உலகில் பல நாடுகள் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன, மருந்து கண்டுபிடிப்பில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கட்டத்தை அடைந்துள்ளன.

அமெரிக்காவில் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் கரோனாவுக்கு அஞ்சி வெளிேய வரத் தயங்குகின்றனர். அமெரிக்காவில் நேற்று கூட 1,750 பேர் உயிரிழந்தனர், 27 ஆயிரம் பேருக்கு கரோனா பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்டது

இந்நிலையில் வாஷிங்டனில் ஃபாக்ஸ் செய்தி சேனலுக்கு அதிபர் ட்ரம்ப் நேற்று பேட்டி அளி்த்தார். அப்போது அவர் கூறியதாவது

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் ெபருந்தொற்று நோய்க்கு அமெரிக்க ஆய்வாளர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து விடுவார்கள். இதில் நான் மட்டுமல்ல, ஆய்வாளர்களும்நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அதற்கான கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்கள்
வரும் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் அனைத்துப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்க முடிவு செய்துள்ளோம்.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மற்ற நாடுகளும் ஈடுபட்டுள்ளன. ஆனால்அமெரிக்காதான் முதலில் கண்டுபிடிக்கும் என நம்புகிறேன். அப்படி ஒரு வேளை மற்ற நாடுகள் தடுப்பு மருந்தை முன்கூட்டியே கண்டுபிடித்தால் அந்த நாட்டுக்கு வாழ்த்துத்கள் தெரிவிப்பேன், மிகவும் மகிழ்ச்சியும் அடைவேன்

எந்த நாடு கண்டுபிடித்தாலும் பரவாயில்லை, முதலில் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து வர வேண்டும். அமெரிக்காவில் மனிதர்களுக்கு உடலில் செலுத்தி பரிசோதிக்கும் முயற்சி நடந்து வருகிறது. அதற்கான தன்னார்வலர்கள் பலர் வந்துள்ளனர். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கவில்லை. “ இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x