Published : 02 May 2020 11:14 AM
Last Updated : 02 May 2020 11:14 AM

லண்டன் சிறையில் ஜூலியன் அசாஞ்சே உயிருக்கு ஆபத்து? - சிறைக்குள் கரோனாவினால் அச்சம்

கரோனா வைரஸ் பிரிட்டனில் தீவிரமாக இருந்து வரும் நிலையில் லண்டன் சிறையில் இருக்கும் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது வாழ்க்கைத் துணையான ஸ்டெல்லா மோரிஸ் அச்சம் வெளியிட்டுள்ளார்.

கரோனாவுக்கு பிரிட்டனில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 177500 என்ற எண்ணிக்கையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 27,510 பேர் பலியாகியுள்ளனர். எவ்வளவு பேர் குணமடைந்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.

இந்நிலையில் லண்டன் சிறையில் இருக்கும் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கரோனா வைரஸ் தொற்று ஆபத்தில் இருப்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அவரது வாழ்க்கைத் துணை ஸ்டெல்லா மோரிஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.

“என்னுடைய கணவர் ஜூலியன் அசாஞ்சேயின் உயிருக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எச்.எம்.பி. பெல்மார்ஷ் சிறையில் அவர் இருக்கிறார். கரோனா வைரஸ் சிறைக்குள்ளும் பரவியிருக்கிறது, அசாஞ்சேயை இப்போது விடுவிக்க வேண்டும். குழந்தைகள் அவர் இல்லாமல் வளர்வதை நான் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அசாஞ்சே அமெரிக்காவுக்கு தன்னை நாடுகடத்துவதை எதிர்த்துப் போராடி வருகிறார், அமெரிக்கா இவர் மீது கடும் கடுப்புடன் இருந்து வருகிறது, ஆனால் இவரது ஆதரவாளர்களோ பேச்சுரிமை எழுத்துரிமையின் குறியீடு அசாஞ்சே என்று கொண்டாடி வருகின்றனர்.

இவர் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் அமெரிக்காவின் சதிகளை, தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தியது. அவரைப்பழி வாங்கவே அமெரிக்கா அவரை தங்கள் நாட்டுக்குக் கொண்டு வருகிறது.

ஆனால் அமெரிக்க அதிகாரிகளோ, பல நாடுகளில் இவரது வெளியீட்டினால் மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள், இன்பார்மண்ட்கள், அந்தந்த நாட்டு அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதற்காகவே அவர் மீது வழக்கு என்று ஒரு புதுக்கதையை கூறிவருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x