Last Updated : 26 Apr, 2020 11:38 AM

 

Published : 26 Apr 2020 11:38 AM
Last Updated : 26 Apr 2020 11:38 AM

மூளைச்சாவு அடைந்துவிட்டாரா வடகொரிய அதிபர் கிம்? மருத்துவ வல்லுநர்கள் குழுவை அனுப்பியது சீனா: உண்மை நிலவரம் என்ன?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதய அறுவை சிகிச்சைக்குப்பின் உணர்வற்று, மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், அவருக்கு மருத்து ஆலோசனை வழங்க மருத்துவ வல்லுநர்கள் குழுவை சீனா அனுப்பி வைத்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

அதேசமயம், கடந்த வாரத்திலிருந்து அதிபர் கிம் ஜாங் ஓய்வெடுக்கும் வோன்சான் நகரில் உள்ள மாளிகை வளாகத்தில் அவர் பயன்படுத்தும் பிரத்யேக ரயில் தயாராக இருப்பதாக ெசயற்கக்கைக்கோள் புகைப்படம் தெரிவிக்கிறது. அதிபர் கிம் உடல்நிலை குறித்து தொடர்ந்து ஆதாரமற்ற செய்திகள் வருவதால் எதையும் உறுதி செய்யமுடியவில்லை.

வட கொரியா அதிபர் கிம் ஜாங் சமீபகாலமாக வெளிஉலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011-ம்ஆண்டு அதிபராக வந்தபின் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்துள்ளா்.

சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்க உளவுத்துறையும் இதை தீவிரமாகக் கண்காணித்து வருகிறதாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி கடந்த இரு நாட்களுக்கு முன் பேட்டி அளித்த அதிபர் ட்ரம்ப், “ அதிபர் கிம் உடல்நலம் தேற வாழ்த்துக்கள் “ என மட்டும் தெரிவித்திருந்தார்

40 வயதுக்குள் இருக்கும் அதிபர் கிம்முக்கு அதீதமான புைகப்பழக்கம், உடல் பருவமன், உடல்சோர்வு உற்சாகமின்மை, அதிக தூக்கம் ஆகியவற்றால் அவதிப்பட்டார். இதனால் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் கிம்மின்உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சிஎன்என் சேனல் செய்தி வெளியி்ட்டது.

இந்த செய்தியின் அடிப்படையில் அதிபர் கிம் உடல்நலம் ேதற வாழ்த்துத் தெரிவித்த அதிபர் ட்ரம்ப், பின்னர் கிம் தொடர்பான செய்திகள் உண்மைக்கு மாறானவை என்று தெரிவித்தார்.

வடகொரியா தீவிரமான கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் நாடு. அங்கு ஊடகங்களின் செய்திகூட அரசின் தணிக்கைக்குப்பின்புதான் வெளியாகும். இதனால்தான் அதிபர் கிம் உடல்நிலை குறித்த எந்ததகவலும் வெளிஉலகிற்கு தெரியாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிறுத்தப்பட்டிருக்கும் புகைப்படம்

கிம்மின் தந்தையும் முன்னாள் அதிபருமான 2-ம் கிம் ஜான் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்தார். அவர் உயிரிழந்த 2 நாட்களுக்குப்பின்புதான் அந்த செய்தி வெளியுலகிற்கே தெரிந்தது. ஆதலால் வடகொரியாவிலிருந்து எளிதாக எந்த செய்தியும் கசிந்துவிடாது.

உலக நாடுகளை தனது கண்காணிப்பில் கீழ் வைத்திருக்கும் அமெரிக்ககா கூட கிம் உடல்நிலை குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடாமல் இருந்து வருகிறது

தென் கொரியாவைச் சேர்ந்த டெய்லிஎன்கே இணைதளம் கூறுகையில் “ வடகொரியத்தலைநகர் யாங்காங் அருகே உள்ள யாங்சான் தீவில் ஒரு வீ்ட்டில் அதிபர் கிம் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு நடந்த அறுவை சிகி்ச்சைக்குப்பின் மெல்ல குணமைடைந்து வருகிறார்” எனத் தெரிவிக்கிறது

தென் கொரியாவைச் சேர்ந்த பல்வேறு ஊடகங்கள், அதிபர் கிம் வோன்சான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர் பயன்படுத்தும் விமானம் தலைநகர் யாங்யாங்கில்தான் இருக்கிறது எனத் தெரிவிக்கின்றன

இதற்கிடையே வடகொரியா குறித்து ஆய்வு செய்து வரும் 38நார்த் எனும் இணையதளம், “ அதிபர் கிம் உடல்நிலை குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் தலைநகர் யாங்யாங்கில் இல்லை. வேறு இடத்தில் தங்கியுள்ளார். அவர் தங்கியுள்ள இடத்தில்தான் அவர் பயன்படுத்தும் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.”

ஆனால் வடகொரியாவுக்கு நெருக்கமாக இருக்கும் தென் கொரியா அரசு சார்பில், அதிபர் கிம் உடல்நிலை குறித்து எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை. உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்படவில்லை என்று மட்டும் தெரிவி்த்து வருகிறது

அதிபர் கிம்முடன் சகோதரி கிம் யூ ஜாங்

ஆனால் அதிபர் கிம் இதய அறுவை சிகிச்சை செய்தபின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருவதை ஜப்பான் ஊடகங்களும், சிஎன்என் செய்தியும் தொடர்ந்து தெரிவி்த்து வருகின்றன. அதிபர் கிம் உணர்வற்ற நிலைக்கு சென்றதால், அவரின் உடல்நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர சீனாவின உதவியை வடகொரியா கோரியுள்ளது. இதன்படி மருத்துவ வல்லுநர்கள் குழுவை வடகொரியாவுக்கு சீனா அனுப்பி வைத்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

ஆனால், வடகொரியாவைப் பொறுத்தவரை கிம் குடும்பத்தார் அதிகாரம் தங்களை வி்ட்டு ெசல்லக்கூடாது என்பதில் மிகவும் விழிப்புடன் இருந்து வருகிறார்கள். இதுபோன்ற ஆபத்தான சூழல் எதிர்கொள்ளலாம் என்பதால்தான் மாற்று தலைவரை தொடர்ந்து உருவாக்குகின்றனர். 2-ம் கிம் இறந்தபின் அவரின் மகன் கிம் ஜான் அதிபராக வந்தார் . இப்போது கிம் ஜாங் உன் இறந்துவிட்டால் கூட அவர் வளர்க்கும் சகோதரி கிம் யூ ஜாங் அடுத்த அதிபராக உடனடியாக பதவி ஏற்பார் என்றும் தகவல்கள்தெரிவிக்கின்றன

ஆசியாவுக்கான தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரியும் வடகொரியா பொறுப்பாளராக இருந்த டேனி ரூசல் கூறுகையில், “ வடகொரியா நாட்டிலிருந்து எந்த செய்தியும் எளிதாக வெளியுலகிற்கு வராது. கிம் தந்தை, கிம்தாத்தா, கிம் தாத்தாவின் தந்தை, இப்போது அதிபர் கிம் இவர்களைப் பற்றி தொடர்்ந்து வதந்தகள்வந்தாலும் நாம்தான் எச்சரி்கையுடன் இருக்க வேண்டும். அதிபர் கிம் குறித்து பல செய்திகள் வந்தாலும் அவர் மக்கள் முன் தோன்ற வேண்டும்.

அதிபர் கிம் வழக்கம் போல் தனது பணியை செய்துவருவதாக தென் கொரிய அதிபர் அலுவலகம் உறுதிசெய்யப்படாத செய்திகளைத் தெரிவிக்கிறது. அவரின் உடல்நிலை குறித்த செய்திகளையும் மறுக்கிறது. வடகொரியா அரசிடம் எந்த தகவலும் இதுவரை இல்லை என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு இதுபோன்று கிம் குறித்த பல்வேறு வதந்திகள் வந்தன, ஆனால் 6 வாரங்களாக மக்கள் மத்தியில் வராத கிம் பின்னர் வந்தார். ஆதலால் பொறுத்திருந்து பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x