Last Updated : 16 Apr, 2020 04:23 PM

 

Published : 16 Apr 2020 04:23 PM
Last Updated : 16 Apr 2020 04:23 PM

அமெரிக்காவில் வேலையிழப்பின் இரண்டாம் அலை வருகிறது; யாருக்கும் பாதுகாப்பில்லை: வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி

விமானத்துறை, சேவைத்துறை மட்டுமல்லாது, பல்வேறு துறைகளில் உயர் பதவியில் இருக்கும் அனைவரின் வேலையும் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் ஊரடங்கு நிலவுவதால், மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். சமூக விலகல் காரணமாக பல்வேறு துறைகள் செயல்படாத நிலையில் உள்ளன. இது நீடித்தால் 2007-09இல் உருவான வேலையில்லாப் பிரச்சினை மீண்டும் வரும் அபாயம் உள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது.

வேலை கொடுப்பவர்கள் இல்லை, விற்பனைகள் சரிவு, பணப்புழக்கக் கட்டுப்பாடு ஆகிய காரணங்களால், அதிக சம்பளம் தரும் மற்றும் அதிக திறனுக்கான வேலைகளுக்கும் ஆபத்து இருப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

57 பொருளாதார வல்லுநர்களை இந்த மாதம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பேட்டி கண்டது. அவர்களின் ஒருமித்த கருத்து, வரும் மாதங்களில் 14.4 மில்லியன் வேலைகள் காலியாகும் என்பதே. வேலை கிடைக்காத நபர்களின் சதவீதம் ஜூன் மாதம் 13 சதவீதம் என்ற சாதனை இலக்கை எட்டும். இது பிப்ரவரி மாதம் 3.5 சதவீதம் மட்டுமே இருந்தது.

16.8 மில்லியன் அமெரிக்கப் பணியாளர்கள், அதாவது அமெரிக்காவில் இருக்கும் பணியாளர்களில் 11 சதவீத மக்கள், ஏற்கெனவே வேலையில்லை என்று பதிவு செய்து, வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கான சலுகையைக் கோரியுள்ளனர்.

சில்லறை விற்பனை, மொத்த விற்பனை, தொழில் முறை வேலைகள், வியாபாரம், சட்டத்துறை, ஐடி, நிகழ்ச்சி மேலாண்மை என அனைத்து வகையான துறைகளும் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் அரசாங்கத்தில் வேலை செய்பவர்களும் அடக்கம். அமெரிக்காவின் பல நகராட்சிகள், பல நூறு பணியாளர்களை வேலையை விட்டு அனுப்பியுள்ளது.

45 வயதுக்குக் கீழ் இருக்கும் வாக்காளர்களில் 26 சதவீதத்துக்கும் அதிகமான நபர்கள் பேர் வேலையிழந்துள்ளனர், கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளனர் அல்லது வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வேலையிழந்தவர்களில் மீதமிருக்கும் 26 சதவீதத்தினர், 45 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்.

சம்பளம் இல்லாமல் அதிகபட்சம் இன்னும் 1 அல்லது 2 மாதங்கள் வரை மட்டுமே வாழ முடியும் என்கின்றனர் பெரும்பாலானவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x