Last Updated : 11 Apr, 2020 02:34 PM

 

Published : 11 Apr 2020 02:34 PM
Last Updated : 11 Apr 2020 02:34 PM

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை ‘ஹேப்பி குட் ஃபிரைடே’ என்று வாழ்த்திய ட்ரம்ப்: ஏற்கெனவே கரோனா வேதனையில் இருக்கும் நெட்டிசன்கள் விளாசல் 

புனித வெள்ளி என்று கிறித்துவர்களால் உலகம் முழுதும் அனுசரிக்கப்படும் நாள் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாளாகும். இது அவர்களுக்கு துக்க அனுஷ்டிப்பு நாள், ஈஸ்டர், அதாவது ஞாயிறன்று கொண்டாடப்படுவது ஈஸ்டர் இது கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் நாள்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று ‘ஹாப்பி குட் ஃபிரை டே’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்துக் கூறியதற்கு நெட்டிசன்களிடம் வகையாகச் சிக்கினார்.

வெள்ளிக்கிழமையன்று ட்விட்டரில் அதிபர் ட்ரம்ப், ““HAPPY GOOD FRIDAY TO ALL” என்று பதிவிட்டிருந்தார். அவரது அடிப்படை அறிவின்மையை நெட்டிசன்கள் விளாசித்தள்ளியுள்ளனர்.

அவரைப் பின்தொடரும் ட்விட்டர்வாசி ஒருவர் “உங்களுக்கு கிறிஸ்த்துவம் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதற்கு இது இன்னொரு அத்தாட்சி, புனித வெள்ளியில் மகிழ்ச்சி எதுவும் இல்லை, ஈஸ்டர் ஞாயிறுக்காக காத்திருக்க முடியவில்லை” என்று சாடினார்.

இன்னொருவர், “இது கிறித்துவர்களுக்கு பவித்ரமான நாள், அதை யாரும் மகிழ்ச்சியான வெள்ளி என்று அழைக்க மாட்டார்கள். பேர்ல் ஹார்பரின் முக்கியத்துவத்தை அறியாதது போல் வேதாகமத்தின் படி புனித வெள்ளி அன்று என்ன நடந்தது என்பதும் நம் அதிபருக்குத் தெரியவில்லை.

இன்னொரு நபர், தேவாலயத்துக்கு சென்றால் இந்த நாளின் முக்கியத்துவம் தெரிந்திருக்கு கிறித்துவத்தைக்க கூட உங்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை எனறு வாங்கியுள்ளார்.

ஆனால் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ”இன்று புனித வெள்ளி, இந்த ஞாயிறு கிறித்துவர்கள் ஈஸ்டர் நாளை, இயேசு உயிர்த்தெழுந்த நாளை கொண்டாடுவார்கள். இந்தப் புனித நாளில் கடவுள் நோயுற்றவர்களின் நோயை குணப்படுத்துவார், இருதயம் உடைந்தவர்களை தேற்றுவார், நம் ஹீரோக்களை ஆசீர்வதிப்பார். அமெரிக்க குடும்பங்கள் ஈஸ்டரை எதிர்நோக்குகின்றனர், நம் கதை விரக்தியில் முடிவதல்ல வெற்றியில் மீண்டெழுதலில் உள்ளது என்று நமக்கு நினைவூட்டும் நாள், மிகவும் பொருத்தமானது, இல்லையா?” என்று சரியாகவே கூறியிருந்தார். ஆனால் ஹாப்பி குட் பிரை டே என்று ஏன் கூறினார் என்பது விளங்கவில்லை.

கவனச்சிதறலில் ட்ரம்ப் உளறுவது இது முதல் முறையல்ல, கடந்த ஏப்ரலில் இலங்கை குண்டுவெடிப்பில் 138 பேர் பலியானதை 138 மில்லியன் பேர் பலியானதாகக் குறிப்பிட்டார்.

அதே போல் அவ்வை சண்முகி படத்தில் ஒவ்வொரு முறையும் பெயரை மாற்றி மாற்றி கம்பர் கண்ணகி என்றெல்லாம் அழைப்பது போல் அமேசானின் ஜெஃப் பெஸாஸை, ஜெஃப் போஸோ என்று அழைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு மார்ச்சில் ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக்கை “டிம் ஆப்பிள்” என்று அழைத்து நெட்டிசன்கள் கிண்டல் மழையில் நனைந்தார். அனைத்திற்கும் முன்னதாக லாக்ஹீட் மார்ட்டின் சி.இ.ஓ மேரில்லின் ஹியுசனை ‘மேரிலின் லாக்ஹீட்’ என்று அழைத்ததும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x